மகன் பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த தாய் ! மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது !!

Published : Sep 20, 2019, 09:10 PM IST
மகன் பாலியல் பலாத்காரம் செய்ததை வீடியோ எடுத்த தாய் ! மிரட்டி பணம் பறித்த கும்பல் கைது !!

சுருக்கம்

சத்தீஸ்கரைச்  சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது காதலிக்கு போதை மருந்து கொடுத்து பாலியல் பலாத்காரம் செய்ததை அவரது தாயே வீடியோ எடுத்த கொடுமை நடந்துள்ளது. பின்னர் அந்த வீடியோவைக் காட்டி அவர்கள்பணம் பறித்ததால் கைது செய்யப்பட்டுள்ளனர்.  

சத்தீஸ்கர் மாநிலம் பலோடா பஜார் பகுதியைச் சேர்ந்த  ஆகாஷ் என்ற இளைஞர் 19 வயதே நிரம்பிய இளம்பெண் ஒருவரை காதலிப்பதாக நடித்து வந்துள்ளார். ஒரு நாள் ஆகாஷ்  அப்பெண்ணை தனது வீட்டிற்கு அழைத்துள்ளார். காதலன் அழைக்கிறார் என்று நம்பி அப்பெண்ணும்  இளைஞரின் வீட்டிற்குச் சென்றுள்ளார்.

வீட்டிற்குச் சென்றதும், ஆகாஷிள் தாயார் அந்த இளம்பெண்ணை உபசரித்து, சாப்பிடுவதற்கு குளிர்பானம் கொடுத்துள்ளார். அந்த குளிர்பானத்தில்  போதை மருந்து கலந்திருந்தது அப்பெண்ணுக்குத் தெரியவில்லை. சிறிது நேரத்தில் மயக்கமான அந்தப் பெண்ணை, ஆகாஷ் படுக்கையறைக்கு தூக்கிச் சென்றுள்ளார்.

படுக்கையறையில் அந்தப்பெண்ணை, ஆகாஷ் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மகன் பாலியல் பலாத்காரம் செய்வதை தாய் வீடியோ எடுத்துள்ளார். பின்னர், ஆகாஷின்  சகோதரியும், அவரது கணவனும் சேர்ந்து, அந்த வீடியோவை வைத்து, அப்பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியுள்ளனர்.

அந்தப் பெண் வேறு வழியில்லாமல், அவரது தந்தை நிலம் விற்று வைத்திருந்த 4 லட்சம் ரூபாயை, அந்தக் கும்பலிடம் கொடுத்துள்ளார். மேலும் பணம் கேட்டு பாதிக்கப்பட்ட பெண்ணை அந்தக் குடும்பத்தினர் மிரட்டியுள்ளனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை, நிலம் விற்று மகளிடம் கொடுத்த பணத்தைக் கேட்டுள்ளார். அப்போது கதறி அழுதபடியே நடந்த உண்மையை, தந்தையிடம் கூறியுள்ளார் அந்த இளம்பெண்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தை இதைப் பொறுக்க முடியாமல், காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் அந்த இளைஞரின் குடும்பத்தை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்கள். 

PREV
click me!

Recommended Stories

அட பாவிங்களா... ரூ.3 கோடி பணம்.. அரசு வேலைக்காக பாம்பை ஏவி தந்தை கொ**.. மகன்களின் சதி அம்பலமானது எப்படி?
காலி பாட்டிலுக்காக 5 ரூபாய் தகராறு.. பட்டப்பகலில் 3 குழந்தைகளின் தந்தை ஓட ஓட விரட்டி கொ**..! தூத்துக்குடியில் பயங்கரம்