தலித் இளைஞரை தாக்கி அவர் மீது சிறுநீர் கழித்த 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஆந்திர மாநிலம் என்டிஆர் மாவட்டத்தில் தலித் இளைஞர் ஷியாம் குமார் என்பவரை தாக்கி அவர் மீது சிறுநீர் கழித்ததாக 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது ஜாமீனில் வெளிவர முடியாத பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
கஞ்சிகச்சேர்லா கிராமத்தில் வசிக்கும் தலித் இளைஞரான ஷியாம் குமார் என்பவருக்கும், ஹரிஷ் ரெட்டி என்பவருக்கும் இடையே ஏற்கனவே முன் தலராறு இருந்துள்ளது. இதனிடையே, ஷியாம் குமாரை தாக்க நினைத்த ஹரீஷ் ரெட்டி தனது நண்பர்கள் 5 பேர் உதவியுடன் வாடகை கார் மூலம் ஷியாம் குமாரை கடத்தியுள்ளார். காருக்குள் வைத்து அவரை கொடூரமாக தாக்கிய அவர்கள், பின்னர் மறைவான பகுதியில் வைத்து மீண்டும் அவரை தாக்கியுள்ளனர்.
ஒருகட்டத்தில் ஷியாம் குமார் தண்ணீர் கேட்டபோது, அவர் மீது அவர்கள் சிறுநீர் கழித்துள்ளனர். இதுகுறித்து ஷியாம் குமாரும் அவரது சகோதரரும் அளித்த புகாரின் பேரில், முக்கியக் குற்றவாளியாக கருதப்படும் ஹரிஷ் ரெட்டி உள்ளிட்ட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.
அயோத்தியில் ராமாயணத்தைப் பிரதிபலிக்கும் புதிய ரயில் நிலையம்! வெற லெவல் லுக்கில் AI போட்டோஸ்!
கடந்த 1ஆம் தேதி நடந்த இச்சம்பவம் ஒருநாள் கழித்துத்தான் வெளியுலகிற்கு தெரியவந்தது. முன்னதாக இந்த சம்பவத்தை கண்டித்து, தெலுங்கு தேசம் கட்சியின் பட்டியல் சாதியினர் பிரிவு போராட்டம் நடத்தியது.
“முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் ஆட்சியில் தலித்துகள் மீதான தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. மாநிலத்தில் தலித்துகள் மீதான பல தாக்குதல்கள் தொடர்கின்றன.” என தெலுங்கு தேசம் கட்சி பட்டியல் பிரிவு தலைவர் எம்.எம்.எஸ்.ராஜு குற்றம் சாட்டியுள்ளார்.