கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட தலித் பெண்.. வெறி தீராததால் 3 துண்டுகளாக வெட்டி படுகொலை..!

By vinoth kumar  |  First Published Nov 4, 2023, 1:29 PM IST

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை அடுத்துள்ள படவுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சுக்லா. இவர் மாவு மில் வைத்துள்ளார். அந்த மாவு மில்லில் 40 வயது மதிக்கத்தக்க தலித் பெண் வேலை செய்து வந்துள்ளார்.


தலித் பெண் கூட்டுப் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, வெறி தீராததால் 3 துண்டுகளாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

உத்தரப்பிரதேச மாநிலம் பண்டா மாவட்டத்தை அடுத்துள்ள படவுரா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்குமார் சுக்லா. இவர் மாவு மில் வைத்துள்ளார். அந்த மாவு மில்லில் 40 வயது மதிக்கத்தக்க தலித் பெண் வேலை செய்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை வழக்கம்போல அந்தப் பெண் மாவு மில்லுக்கு வேலைக்கு வந்துள்ளார். அப்போது தாயை அழைத்து செல்ல தனது 20 வயது மகள் வந்த போது ஒரு அறையில் இருந்து தாயின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்தார். 

Tap to resize

Latest Videos

உடனே மாவு மில்லின் அறைக் கதவைத் திறந்தபோது, தன்னுடைய தாயின் உடல் மூன்று துண்டுகளாக வெட்டப்பட்டு கிடந்தததைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்துபோய் அழுது கதறினார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இந்த கொலை சம்பவம் தொடர்பாக ராஜ்குமார் சுக்லா, அவரது சகோதரர் பவா சுக்லா மற்றும் ராமகிருஷ்ண சுக்லா ஆகிய 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். தலைமறைவாக உள்ள அவரை தீவிரமாக தேடி வருகின்றனர்.

click me!