மனைவிக்கு உப்புமாவில் விஷம் கலந்து கொலை செய்த விவகாரம்; விசாரணைக்கு பயந்து பொறியாளர் தற்கொலை

Published : Nov 03, 2023, 02:47 PM IST
மனைவிக்கு உப்புமாவில் விஷம் கலந்து கொலை செய்த விவகாரம்; விசாரணைக்கு பயந்து பொறியாளர் தற்கொலை

சுருக்கம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் மனைவியை உணவில் விஷம் கலந்து கொலை செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கன்னியாகுமரி மாவட்டம் முளகுமூடு பகுதியை அடுத்த வெள்ளிகோடு பகுதியைச் சேர்ந்தவர் பெல்லார்மின் (வயது 34) பொறியாளரான இவர் கல்லூரி பேராசிரியராக பணியாற்றி வந்தார். இந்த நிலையில் கடந்த 2019-ம் ஆண்டு மார்ச் 6-ம் தேதி தனது மனைவி திவ்யா சில்வெஸ்டர் ஐ உப்புமாவில் விஷம் கலந்து கொடுத்து கொலை செய்த வழக்கில் சிறை சென்ற இவர் பிணையில் வந்து தற்போது ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

உறுப்பு தானம் மூலம் 5 நபர்களுக்கு வாழ்வளித்தவருக்கு அரசு சார்பாக இறுதி மரியாதை செலுத்திய கடலூர் ஆட்சியர்

மனைவியை கொன்ற வழக்கு பத்மநாபபுரம் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் வியாழக்கிழமை வழக்கு விசாரணைக்கு வர இருந்த நிலையில் அன்றைய தினம் காலை வெகு நேரமாகியும் பெல்லார்மின் வீட்டின் அறையை விட்டு வெளியே வராததால் சந்தேகமடைந்த பெற்றோர் அறை ககதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அவர் மின் விசிரியில் தூக்கிட்ட படி தொங்கியுள்ளார்.

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தக்கலை போலீசார் நடத்திய விசாரணையில் பெல்லார்மின் மனைவி திவ்யா சில்வெஸ்டர் ஐ ஆன்லைனில் விஷம் வாங்கி உப்புமாவில் கலந்து கொடுத்த கொலை செய்த வழக்கில் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் ஆஜராக சம்மன் வந்த நிலையில் வழக்கில் தந்தை பெர்மான்ஸ், தாய் அமலோற்பம் ஆகியோர் வழக்கில் குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டிருந்ததால் நீதிமன்ற விசாரணைக்கு பயந்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதனையடுத்து தற்கொலை வழக்கு பதிவு செய்த போலீசார் அவரது சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மனைவியை கொலை செய்த வழக்கில் நீதிமன்ற விசாரணைக்கு பயந்து பொறியாளர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஏண்டா.. எங்க ஊருக்கே வந்து பொண்ண இப்படி செய்வீங்களா? வாலிபர்களை சுத்துப்போட்ட கிராம மக்கள்! இறுதியில் நடந்த அதிர்ச்சி
தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!