அட கடவுளே.. இதுக்கு கூடவா கொலை செய்றாங்க.. மருத்துவ மாணவரை துடிதுடிக்க கொன்ற கும்பல்.. !

Published : Jul 26, 2021, 07:17 PM IST
அட கடவுளே.. இதுக்கு கூடவா கொலை செய்றாங்க.. மருத்துவ மாணவரை துடிதுடிக்க கொன்ற கும்பல்.. !

சுருக்கம்

சிவகங்கை அருகே வயலில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட மருத்துவ மாணவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே வயலில் மது அருந்தியவர்களை தட்டிக் கேட்ட மருத்துவ மாணவர் கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை அருகே முத்துநகரை சேர்ந்தவர் இருதயராஜ் (60). ஓய்வுபெற்ற தலைமையாசிரியர். இவரது மகன்கள் ஜோசப் சேவியர் (25), கிறிஸ்டோபர் (20), பிலிப்பைன்ஸ் நாட்டில் மருத்துவ படிப்பு படித்து வருகின்றனர். தற்போது கொரோனா பரவல் காரணமாக சொந்த ஊருக்கு வந்து ஆன்லைன் மூலம் படித்து வந்தனர். அண்ணாமலை நகர் சுடுகாட்டு பகுதி அருகே இருதயராஜூக்கு சொந்தமாக 20 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இங்கு நேற்று பிற்பகல் அடையாளம் தெரியாத 6 பேர் கும்பல் மது அருந்தி கொண்டிருப்பதாக இருதயராஜூக்கு தகவல் கொடுத்துள்ளனர். 

உடனே இருதயராஜ், மகன்களுடன் சம்பவ இடத்திற்கு சென்றனர். 3 பேரும் அங்கிருந்த போதை கும்பலை தட்டி கேட்டனர். அப்போது, இருதரப்புக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், ஆத்திரமடைந்த கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாள் மற்றும் கத்தியால் தந்தை, மகன்களை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதில், ரத்த வெள்ளத்தில் படுகாயமடைந்த  கிறிஸ்டோபர் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். ஜோசப் சேவியர்,  இருதயராஜூக்கும் லேசான காயம் ஏற்பட்டது. இதனையடுத்து, அப்பகுதி மக்கள் மீட்டு சிவகங்கை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 8 தனிப்படைகள் அமைத்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். இந்த சம்பவம் சிவகங்கை பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV
click me!

Recommended Stories

பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!
திருமணமான 3 மாதத்தில் நிகிலா.. தடுக்க வந்த அண்ணன்.. இருவரின் கதையை முடித்ததும் வேறு வழியில்லாமல் தந்தை மகன் எடுத்த முடிவு