10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும்.? நம்பவேண்டாம் என கதறும் போலீஸ்.

By Ezhilarasan BabuFirst Published Jul 26, 2021, 9:56 AM IST
Highlights

அதேபோல் பொது மக்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட ரகசிய எண்களை குறிவைத்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லிங்குகளுடன் கூடிய மர்ம  மெசேஜ்கள் உலா வருகின்றன.  

10 நிமிடத்தில் அப்டேட் செய்யவில்லையென்றால் வங்கி கணக்கு முடக்கப்படும் என செல்போனிற்கு வரக்கூடிய மெசேஜ் லிங்கை தொட வேண்டாம் என சென்னை காவல்துறை பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அடிதடி, ஆள் கடத்தல், கொலை, கொள்ளை போன்ற குற்றங்களை காட்டிலும் தற்போது காவல் துறைக்கு பெரும் சவாலாக மாறி இருப்பது சைபர் கிரைம் குற்றங்களே என்றால் அது மிகையாகாது. சமீபகாலமாக இணையதளங்களில் நடைபெறும் குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை, மற்றும் அது தொடர்பான புகார்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளது. பொதுமக்களின் வங்கி கணக்கில் உள்ள பணத்தை கொள்ளையடிப்பது, அவர்களின் சுய தகவல்களை திரட்டி அதன்மூலம் பணம் பறிப்பது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. 

அதேபோல் பொது மக்களின் வங்கிக் கணக்கு உள்ளிட்ட ரகசிய எண்களை குறிவைத்து பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் லிங்குகளுடன் கூடிய மர்ம  மெசேஜ்கள் உலா வருகின்றன.  சில நேரங்களில் அந்த லிங்கை அழுத்தி விட்டால் கூட அந்த நபரின் ரகசிய தகவல்கள் திருடப்படும் ஆபத்து உள்ளது. எனவே பொதுமக்கள் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும் என்றும், தேவையில்லாத செயலிகள், லிங்குகளை பதிவேற்றம் செய்ய கூடாது என தொடர்ந்து போலீசார் எச்சரித்து வருகின்றனர். அந்த வகையில் சென்னை சைபர் கிரைம் போலீசார் பொதுமக்களுக்கு அதிரடி எச்சரிக்கை வந்துவிட்டு விடுத்துள்ளனர். அதில், 

சமீபகாலமாக அங்கீகரிக்கப்பட்ட வங்கி மூலமாக வருவது போல் ஒரு லிங்க் மெசெஜ் அனைத்து செல்போன் எண்ணிற்கும் வருகிறது. அந்த மெசேஜில் இந்த லிங்கை 10 நிமிடத்திற்குள் அழுத்தி உங்களது,  Kyc/pan card/  aadhar card விவரங்களை  பதிவிட வேண்டும் எனவும், இல்லையென்றால் உங்களது வங்கி கணக்கு முடக்கப்படும் என தெரிவித்துள்ளது. இதனை நம்பி பொதுமக்கள் பலர் அந்த லிங்க் மூலமாக தங்களது விவரங்களை பதிவு செய்வதாகவும், அந்த சமயத்தில் அதாவது 2-3 நிமிடங்களில் குறிப்பிட்ட வங்கி கணக்கின் தனிப்பட்ட விவரங்களை மோசடி கும்பல் திருடி, உடனடியாக ஏடிஎம் மூலமாகவும், ஷாப்பிங் மூலமாகவும் பணத்தை திருடி வருகின்றனர். இது போல் வரக்கூடிய மெசேஜை பொதுமக்கள் ஒருவரும் நம்பவேண்டாம் எனவும், எந்த வங்கியிலிருந்தும் இது போன்ற மெசேஜ் அனுப்பமாட்டார்கள் எனவும் சென்னை போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளனர்.
 

click me!