ஒருதலைக்காதல்.. நள்ளிரவில் கல்லூரி மாணவி வீட்டுக்குள் புகுந்த வாலிபர்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

Published : Jul 26, 2021, 03:46 PM IST
ஒருதலைக்காதல்.. நள்ளிரவில் கல்லூரி மாணவி வீட்டுக்குள் புகுந்த வாலிபர்.. இறுதியில் நேர்ந்த பயங்கரம்..!

சுருக்கம்

திருவாரூர் அருகே ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருவாரூர் அருகே ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவியின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொடூரமாக கொலை செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்த பாண்டியன் மகள் மவுலிகா(18). திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகே பேட்டையில் உள்ள பாட்டி ராஜகுமாரி வீட்டில் தங்கி தனியார் கல்லூரியில் பித்து வந்தார். இந்நிலையில், இவர்களது உறவினர் திருக்களார் கிராமத்தை சேர்ந்த பொதியப்பன் மகன் சிவசங்கரன்(28) இறால் பண்ணையில் கூலித் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் மவுலிகாவை ஒருதலையாக காதலித்துள்ளார். மேலும் இவருக்கு பெண் தருவதற்கு அவரது பெற்றோரும் மறுத்து விட்டதால் ஆத்திரத்தில் இருந்து வந்துள்ளார்.

இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு மவுலிகா வீட்டுக்கு சிவசங்கரன் நுழைந்தார். அப்போது, தூக்கிக்கொண்டிருந்த மவுலிகா தலையில் அம்மிக்கல்லை தூக்கி போட்டு விட்டு தப்பிவிட்டார். மவுலிகாவின் அலறல் சத்தம் கேட்டு பாட்டி ராஜகுமாரி எழுந்து பார்த்தபோது ரத்த வெள்ளத்தில் அவர் உயிருக்கு போராடி கொண்டிருந்தார்.

உடனே அவரை மீட்டு தஞ்சை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி மவுலிகா பரிதாபமாக உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பியோடிய சிவசங்கரனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒருதலைக் காதலால் கல்லூரி மாணவி கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

போட்டு தாக்கிய குளிரால் அலறிய பொதுமக்கள்! மீண்டும் சென்னையில் ஆட்டத்தை ஆரம்பித்த மழை
கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!