ஒரே நேரத்தில் அக்கா,தங்கை காரில் கடத்தல்.. ரூமில் அடைத்து வைத்து கதற விட்ட இளைஞர்கள்.. இறுதியில் நடந்தது என்ன?

Published : Jun 22, 2022, 02:17 PM IST
ஒரே நேரத்தில் அக்கா,தங்கை காரில் கடத்தல்.. ரூமில் அடைத்து வைத்து கதற விட்ட இளைஞர்கள்.. இறுதியில் நடந்தது என்ன?

சுருக்கம்

நாமக்கல்லில் பள்ளி மாணவிகளான அக்காள்-தங்கையை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள்போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாமக்கல்லில் பள்ளி மாணவிகளான அக்காள்-தங்கையை கடத்தி சென்று பாலியல் பலாத்காரம் செய்த 2 வாலிபர்கள்போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன்சந்தை பேட்டை பகுதியை சேர்ந்த சகோதரிகள், அங்குள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் முறையே 12வது மற்றும் 10ம் வகுப்பு படித்து வந்தனர். தந்தை இல்லாத இருவரும், தாயாரின் பாதுகாப்பில் வசித்து வருகின்றனர். தேர்வு விடுமுறையின்போது, ஈரோட் டில் உள்ள ஜவுளிகடைக்கு வேலைக்கு சென்று வந்தனர். கடந்த 18ம் தேதி காலை வேலைக்கு சென்ற 2 பேரும் இரவு வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.

இந்நிலையில், இரவு செல்போனில் மாணவிகளின் தாயாரை தொடர்பு கொண்ட ஒரு நபர், சகோதரிகள் இருவரும் வீட்டிற்கு திரும்பி விட்டார்களா? என விசாரித்து விட்டு, இணைப்பை துண்டித்துள்ளார். இதனால், சந்தேகமடைந்த மாணவிகளின் தாயார், இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். அந்த எண்ணை தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. விசாரணையில், அந்த எண்ணை அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ் (21) என்பவர் பயன்படுத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது. மேல்நிலைத் தொட்டி சுத்தம் செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி வரும் சந்தோசும், அவரது நண்பர் வினோத்தும் சேர்ந்து, கம்பெனி காரில் 2 மாணவிகளையும் கடத்திச்சென்று, நாமக்கல்லில் உள்ள தங்கும் விடுதியில் அடைத்து வைத்துள்ளது தெரியவந்தது.

இதுகுறித்த தகவலின் பேரில் நாமக்கல் போலீசார் தங்கும் விடுதிக்கு சென்று மாணவிகளை மீட்டனர். அவர்களை கடத்திச் சென்று அடைத்து வைத்திருந்த 2 வாலிபர்களை பிடித்து விசாரணை மேற்கொண்டனர். அவர்கள் இருவரும், மாணவிகளுக்கு அறிமுகமானவர்கள் என்றும், இரவு வேலை முடிந்து வீடு திரும்ப முயன்றபோது, தங்கள் காரில் பள்ளிபாளையம் கொண்டு சென்று விடுவதாக கூறி கடத்திச் சென்று, நாமக்கல் தங்கும் விடுதியில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து சந்தோஷ், வினோத் ஆகிய 2 பேரும் விசாரணைக்காக அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர். தொடர்ந்து 2 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட் டது. பின்னர் சந்தோஷ், வினோத் ஆகியோரை கைது செய்து நீதிமன்றத் தில் ஆஜர்படுத்தி நாமக்கல் சிறையில் போலீசார் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

சகோதரியை கண்டித்த ஆசிரியர்..! பள்ளியில் துப்பாக்கிச் சூட்டில் 22 குழந்தைகள் பலி..! பணயக் கைதிகளான ஆசிரியர்கள்..!
'இந்தியாவை எதிர்க்கும் எவருக்கும் இதுதான் நடக்கும்..!' சிறையில் கதறக் கதற கொல்லப்பட்ட பயங்கரவாதி.. கொலையாளிக்கு பெருகும் ஆதரவு..!