பரங்கிமலை ரயில் நிலையத்தில் ரயிலில் தள்ளிக் கொல்லப்பட்ட மாணவி சத்யபிரியாவின் 7 வயது தங்கை குடும்பத்தினர் அனைவரையும் இழந்து பரிதாப நிலையில் இருக்கிறார்.
சென்னையை அருகே உள்ள ஆலந்தூர் ராஜா தெரு காவலர் குடியிருப்பைச் சேர்ந்தவர் மாணிக்கம் (47). இவரது மனைவி ராமலட்சுமி (43) ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் குற்றப்பிரிவு தலைமை காவலர். இவர்களுக்கு இரண்டு மகள்கள். மூத்த மகள் சத்தியப்பிரியா (20) தி. நகர் தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்துக்கொண்டிருந்தார்.
சத்யபிரியாவை அதே தெருவைச் சேர்ந்த ஒய்வு பெற்ற போலீஸ் அதிகாரி தயாளனின் மகன் சதீஷ் (30) காதலித்தார் எனக் கூறப்படுகிறது. சத்யபிரியாவிடம் சதீஷ் தன் காதலைத் தெரிவித்தபோது அவர் ஏற்க மறுத்திருக்கிறார். இதனால் சத்யபிரியா மீது சதீஷ் ஆத்திரத்தில் இருந்துள்ளார்.
இந்தச் சூழ்நிலையில், 2022ஆம் ஆண்டு அக்டோபர் 13ஆம் தேதி சத்யபிரியா கல்லூரி செல்ல பரங்கிமலை ரயில் நிலையத்திற்கு வந்து தன் தோழியுடன் ரயிலுக்குக் காத்திருந்தார். அங்கு வந்த சதீஷ் ரயில் ஓடிக்கொண்டிருக்கும்போது சசத்யபிரியாவை தண்டவாளத்தில் தள்ளிவிட்டார். ரயிலில் அடிபட்ட சத்யபிரியா நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார்.
சந்தேக கணவனின் தொல்லை தாங்காமல் குழந்தையுடன் கடலில் குதித்து பட்டதாரி பெண் தற்கொலை
இது தொடர்பான வழக்கில் காவல்துறை சதீஷை கைது செய்து சிறையில் அடைத்தது. மகளை இழந்ததால் மனமுடைந்து போயிருந்த சத்யபிரியாவின் தந்தை மாணிக்கம் விஷத்தைக் குடித்து தற்கொலை செய்துகொண்டார். அடுத்தடுத்து நிகழ்ந்த இந்தச் சம்பவங்கள் தமிழ்நாட்டில் மட்டுமின்றி நாட்டு முழுவதும் பெரும் அதிர்வை ஏற்படுத்தின.
கணவரும் மூத்த மகளும் இறந்தபின் சத்யபிரியாவின் தாய் ராமலட்சுமி தன் 7 வயது இளைய மகளுடன் வாழ்ந்து வந்தார். புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த ராமலட்சுமி அதற்காகத் தொடர்ந்து கிசிச்சை எடுத்துவந்திருக்கிறார். சமீபத்தில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த அவர் ஞாயிற்றுக்கிழமை காலை சிகிச்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.
இதனால் 7 வயது சிறுமியான சத்யபிரியாவின் தங்கை தன் பெற்றோரையும் உடன்பிறந்த சகோதரியையும் இழந்துவிட்டு இரங்கத்தக்க நிலையில் இருக்கிறார். ஏழு வயது சிறுமி குடும்பத்தினர் அனைவரையும் இழந்து நிற்கும் அவலம் அனைவரையும் துயரத்தில் ஆழ்த்துவதாக உள்ளது.
தலைக்கேறிய காமம்.. தூங்கி கொண்டிருந்த 80 வயது கிழவியை வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்..!