புதுச்சேரியில் பணி முடிந்து வீட்டுக் சென்று கொண்டு இருந்த கார் ஓட்டுநரின் தலையில் கல்லைப்போட்டு கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரியூர் பகுதி விழுப்புரம் தேசிய நெடுஞ்சாலையில் 40 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் ஒன்று தலை நசுக்கப்பட்ட நிலையில் கிடந்ததுள்ளது. இதுகுறித்து, வில்லியனூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுகாக கதிர்காமம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தினர். இதில், புதுச்சேரி அடுத்த விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தை சேர்ந்த கார் ஓட்டுனர் சண்முகசுந்தரம் (48) என்பது தெரிய வந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலை விரிவாக்க பணி நடைபெற்று வருவதால் இவர் தற்காலிகமாக கண்டமங்கலம் அருகே உள்ள புதுச்சேரி பகுதியான அரியூரில் தனது மனைவி மற்றும் மகன் உடன் வசித்து வந்துள்ளார். நேற்று நள்ளிரவு பணி முடிந்து பேருந்தில் வந்துள்ளார். அப்போது நிறுத்தத்தில் இறங்கியவரை மது போதையில் இருந்த வாலிபர்கள் தலையில் கல்லைப் போட்டு கொலை செய்துவிட்டு தப்பி ஒடியதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா.. இளைஞரின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த தம்பதி..!
மேலும் தப்பி ஓடிய வாலிபர்களை கைது செய்ய வில்லியனூர் போலீசார் தேடி வருகின்றனர்.