தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா.. இளைஞரின் செயலால் அதிர்ச்சியில் உறைந்த தம்பதி..!

By vinoth kumar  |  First Published Aug 19, 2023, 12:15 PM IST

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.


கூடலூர் அருகே மசினகுடியில் தனியார் தங்கும் விடுதி கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்தி பெண்களை வீடியோ எடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

நீலகிரி மாவட்டத்தில் உள்ள மசினகுடி பகுதி முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி அமைந்துள்ளது. இங்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். அவ்வாறு வரும் சுற்றுலா பயணிகள் தங்குவதற்காக மசினகுடி, ஆச்சக்கரை பகுதிகளில் 50க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- மருமகளை மடக்க நினைத்த மாமனார்.. கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணா போதும்! உனக்கு சொத்து பணம் தரம் சொல்லி டார்ச்சர்.!

இந்நிலையில் ஆச்சக்கரை பகுதியில் உள்ள தனியார் தங்கும் விடுதியில்  நேற்று கேரளா மாநிலம்  கோழிகோட்டை சார்ந்த சாஹத்(22) தனது மனைவியுடன் தங்கிய போது கழிவறையில் ரகசிய கேமரா இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுதொடர்பாக மசினகுடி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரை அடுத்து கழிவறையில் ரகசிய கேமரா பொறுத்தியதாக விடுதி ஊழியர் சிண்டு (22) என்பவர் கைது செய்யப்பட்டார். பின்னர், கூடலூர் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். 

இதையும் படிங்க;- சென்னை மெரினாவில் பயங்கரம்! சினிமா பாணியில் கூலிப்படை தலைவன் படுகொலை! அலறி அடித்து ஓடிய பொதுமக்கள்.!

மசினகுடி பகுதிக்கு தினந்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து தங்கி செல்லும் நிலையில் ரகசிய கேமரா பொறுத்தி பெண்களை வீடியோ எடுத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

click me!