ஸ்க்ரூடிரைவரால் தன்னுடன் லீவ்-இன் உறவில் இருந்த பெண்ணை தாக்கியதாகக் கூறப்படும் ஒரு நபர் கடந்த வெள்ளிக்கிழமை அன்று கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தில் அந்த பெண் கடுமையாக காயமடைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
குற்றம் சாட்டப்பட்டவர், உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சிவம் குமார் என அடையாளம் காணப்பட்டுள்ளார், மேலும் குருகிராமில் உள்ள ராஜீவ் சவுக்கில் பகுதியில் இருந்து அந்த நபர் கைது செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் இது தொடர்பாக சதர் பகுதி காவல் நிலையத்தில் அவர் மீது எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று போலீசார் தெரிவித்தனர்.
உ.பி.யைச் சேர்ந்த 28 வயது மதிக்கத்தக்க அந்த பெண் (புகார் அளித்தவர்), கடந்த வியாழக்கிழமை அன்று வலுக்கட்டாயமாக தன்னுடன் உடலுறவு கொள்ளுமாறு சிவம் தன்னை வற்புறுத்தியதாகக் கூறியுள்ளார். ஆனால் அதற்கு அவர் மறுத்ததால், அவர் வெறித்தனமாக தனது கழுத்தில் ஸ்க்ரூடிரைவரால் தாக்கியதாக அந்த பெண் குற்றம்சாட்டியுள்ளார்.
அந்தப் பெண் அளித்த புகாரின்படி, குருகிராமில் உள்ள வாடகை அறையில், தனது கணவரிடமிருந்து பிரிந்து அவர் வசித்து வந்துள்ளார். அப்போது தான் அவர், உ.பி.யில் உள்ள கன்னோஜ் பகுதியைச் சேர்ந்த சிவம் குமாரை சந்தித்துள்ளார்.
அந்த நட்பு காதலாக மாற, நாங்கள் லீவ்-இன் உறவைத் தொடங்கிய சிறிது காலத்திலேயே, திருமணம் என்ற சாக்கில் என்னுடன் சிவம் உடல்ரீதியாக உறவு கொண்டார் என்றும். ஆனால் சமீபத்தில் தான், சிவம் திருமணமானவர் என்பதை அறிந்தேன் என்றும்,'' அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில் கடந்த “வியாழன் மாலை, அவர் பைக்கில் வந்து இறங்கி, அவருடன் மீண்டும் உடலுறவு கொள்ளும்படி என்னை வற்புறுத்தினார். நான் மறுத்ததால், ஆத்திரமடைந்த அவர், ஸ்க்ரூடிரைவரால் என் கழுத்தில் தாக்கிவிட்டு தப்பி ஓடிவிட்டார்,'' என்றார் அவர்.
உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர், அந்த பெண்ணின் புகாரைத் தொடர்ந்து, எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, நாஹர்பூர் போலீஸ் சௌகியின் பொறுப்பாளரான சப்-இன்ஸ்பெக்டர் சந்தீப் குமார் தலைமையிலான குழு, குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.