போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் கைது… தினமும் போதைப்பொருள் ஆர்டர் செய்ததும் அம்பலம்..!

Published : Oct 03, 2021, 05:20 PM IST
போதைப்பொருள் வழக்கில் ஷாருக்கான் மகன் கைது… தினமும் போதைப்பொருள் ஆர்டர் செய்ததும் அம்பலம்..!

சுருக்கம்

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஷாருக்கானின் மகன் ஆர்யன் கான் தினமும் போதைப் பொருட்களை ஆர்டர் செய்து வாங்கியது அவரது வாட்ஸாப் உரையாடலில் அம்பலமாகியுள்ளது.

ஷாருக்கான் மகன் போதைப்பொருள் வழக்கில் பிடிபட்ட விவகாரம் பாலிவுட் திரையுலகையும், மும்பை அரசியலையும் அதிகாலையில் இருந்தே பரபரப்பில் வைத்திருக்கிறது. மும்பையில் இருந்து கோவா செல்லும் ஆடம்பர சொகுசு கப்பலில் போதைப்பொருள் பார்ட்டி நடப்பதாக போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து சாதாரண பயணிகள் போல் கப்பலில் டிக்கெட் எடுத்து பயணித்த போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகள், பார்ட்டி தொடங்கியதும் அனைத்து போதை ஆசாமிகளை சுற்றிவளைத்தனர். போதைப்பொருள் பயன்படுத்தியவர்கள், போதைப்பொருள் வைத்திருந்தவர்கள் என மொத்தம் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யான் கான் உள்பட  13 பேரை அதிகார்கள் சிறைபிடித்தனர்.

அனைவரையும் மும்பை அழைத்து வந்து இருபது மணி நேரத்திற்கும் மேலாக விசாரணை நடத்தப்பட்டது. விசாரணையின் முடிவில் ஷாருக்கானின் மகன் ஆர்யன் கானை போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதியாரிகள் கைது செய்துள்ளனர். ஆர்யன் கான் உள்ளிட்ட மூன்று பேர், மருத்துவ பரிசோதனைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

இதனிடையே, ஆர்யன் கானின் செல்போனை ஆய்வு செய்ததில் அவர் தினமும் கொக்கைன் உள்ளிட்ட போதைப்பொருட்களை ஆர்டர் செய்து வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளஹ்டு. வாட்ஸாப் உரையாடல்களில் இது அம்பலமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

PREV
click me!

Recommended Stories

தனியாக இருந்த மாணவியை மிரட்டி ஆபாச வீடியோ பதிவு.. மக்கள் போராட்டத்தால் ம.பி.யில் பதற்றம்!
என் பொண்ண வாரி கொடுத்துட்டு இருக்கேன்! உனக்கு உல்லா*சம் கேக்குதா! டார்ச்சர் கொடுத்த திமுக வழக்கறிஞர் கொ*லை!