பேப்பர் கட்டரை வைத்து மாணவிக்கு சராமரி குத்து... காதல் விவகாரத்தில் விபரீதம்..!

Published : Oct 01, 2021, 06:12 PM IST
பேப்பர் கட்டரை வைத்து மாணவிக்கு சராமரி குத்து... காதல் விவகாரத்தில் விபரீதம்..!

சுருக்கம்

அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் காதல் விவகாரம் தொடர்பாக மாணவியை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.  

கேரள மாநிலம், கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் மாணவி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேரள மாநிலம் கோட்டயம் பாலா பகுதியில் உள்ள செயின்ட் தாமஸ் கல்லூரியில் தலையோலப்பரம்பு என்ற பகுதியை சேர்ந்த 22 வயதான நித்தினா மோல் என்ற மாணவி மூன்றாமாண்டு சமையல்கலை படித்து வந்தார். அதே கல்லூரியில் கூத்தாட்டுக்குளத்தைச் சேர்ந்த 21 வயதான அபிஷேக் பைஜு  என்ற மாணவரும் படித்து வந்துள்ளார். இந்நிலையில் இன்று காலை கல்லூரி வளாகத்தில் மாணவி நிதினாவை பேப்பரை வெட்டப் பயன்படுத்தும் கட்டரை வைத்து அபிஷேக் சரமாரியாக குத்தியுள்ளார்.

இதில் அந்த மாணவி ரத்த வெள்ளத்தில் கீழே சரிந்தார். இதனைக் கண்டு சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்தனர். மேலும் போலிஸாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் போலிஸார் அந்த மாணவனை பிடித்து விசாரணை நடத்தியதில் காதல் விவகாரம் தொடர்பாக மாணவியை கொலை செய்தது தெரியவந்தது. தொடர்ந்து அந்த மாணவனிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கணவர் கண் முன்னே கதறிய பெண்.. விடாமல் கூட்டாக சேர்ந்து குதறிய சிறுவர்கள் உட்பட 3 பேர்
சிதறி கிடந்த பூ.. கர்சீப்.. தாயின் கதையை முடித்துவிட்டு ஓவர் ஆக்டிங்கால் வசமாக சிக்கிய மகள், மருமகள்.. நடந்தது என்ன?