15 வயது சிறுமியை சீரழித்து பின்னர் திருமணம் செய்த சாமியார்… 5 ஆண்டுகளாக பாலியல் சித்திரவதை செய்த கொடூரம்..!

Published : Oct 02, 2021, 11:08 AM IST
15 வயது சிறுமியை சீரழித்து பின்னர் திருமணம் செய்த சாமியார்… 5 ஆண்டுகளாக பாலியல் சித்திரவதை செய்த கொடூரம்..!

சுருக்கம்

கோயில் பூசாரியின் பாலியல் கொடுமைகளை 5 ஆண்டுகளாக பொறுத்துக்கொண்ட பெண் பின்னர் மகளிர் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.

கோயில் பூசாரியின் பாலியல் கொடுமைகளை 5 பொறுத்துக்கொண்ட பெண் பின்னர் மகளிர் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்துள்ளார்.

சென்னையில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து பின்னர் அவரையே திருமணம் செய்து கொடுமை செய்த கோயில் பூசாரியை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சென்னை குன்றத்தூரை அடுத்த, நந்தம்பாக்கத்தை சேர்ந்த குமரன் என்பவன் அதே பகுதியில் உள்ள அம்மன் கோயில் பூசாரியாகவும் இருந்து வருகிறார். கடந்த 2015-ல் தமது அண்ணன் மனைவியின், தங்கையான 15 வயது சிறுமியை குமரன் பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். இக்கொடுமையை வெளியில் தெரியாமல் மறைக்க குமரணின் குடும்பத்தினர் அச்சிறுமியை கட்டாயப்படுத்தி அந்த காமுகனுக்கே திருமணம் செய்து வைத்தனர்.

இதையடுத்து இருவரும் தனியாக வசித்துவந்த நிலையில் தினந்தோறும், சிறுமியை பூசாரி குமரன் சீரழித்துள்ளான். குமரணனின் பாலியல் கொடூரங்களை தாங்க முடியாமல் தவித்த சிறுமி, தமது அக்காவின் வாழ்க்கையை எண்ணி பொறுமை காத்துள்ளார். சிறுமியை அடித்து துண்புறுத்திய குமரன் ஒரு கட்டத்தில் அவரை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளான். பின்னர் வேறு திருமணம் செய்துகொண்டதாக கூறப்படுகிறது.

5 ஆண்டுகளாக குமரணின் கொடுமைகளை சமாளித்த சிறுமி, தற்போது 20 வயதை எட்டிய நிலையில் சாமியாரின் கொடூரங்கள் குறித்து பூவிருந்தவல்லி மகளிர் காவல் நிலையத்தில் ஆதாரங்களுடன் புகார் அளித்தார். அதனடிப்படையில் சாமியார் குமரனை கைது செய்த போலீஸார், சிறுமியை கட்டாய திருமணம் செய்துவைத்த குமரணனின் குடும்பத்தினர் மீதும் போக்ஸோவில் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

கதறிய 9ம் வகுப்பு பள்ளி மாணவன்.. ஓயாமல் 4 பேர் டார்ச்சர்.. கட்டாய ஓரின**சேர்க்கையால் அதிர்ச்சி!
பல்கலைக்கழகத்தில் சரமாரி துப்பாக்கிச்சூடு.. 2 மாணவர்கள் பலி.. 8 பேர் படுகாயம்.. பரபரப்பு!