டியூசனுக்கு வந்த பள்ளி மாணவனை மதுகொடுத்து பலமுறை பலாத்காரம்.. வெளியான அதிர்ச்சி தகவல்..!

By vinoth kumar  |  First Published Nov 9, 2022, 3:01 PM IST

கேரள மாநிலம் திருச்சூர் அருகே மண்ணுத்தியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவனின் நடவடிக்கையில் ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. 


10ம் வகுப்பு மாணவனை மது கொடுத்து பலமுறை பலாத்காரம் செய்த டியூஷன் ஆசிரியை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். 

கேரள மாநிலம் திருச்சூர் அருகே மண்ணுத்தியில் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 10ம் வகுப்பு படிக்கும் அதே பகுதியை சேர்ந்த ஒரு மாணவனின் நடவடிக்கையில் ஆசிரியர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. நன்றாக படித்து வந்த அந்த மாணவனுக்கு சமீபத்தில் நடத்தப்பட்ட தேர்வுகளில் மிகவும் குறைந்த மதிப்பெண்களே பெற்றுள்ளான். மேலும் சக மாணவர்களுடன் பழகாமல் ஒதுங்கியே இருந்து வந்துள்ளான்.

Tap to resize

Latest Videos

இதையும் படிக்க;- விதவை பெண்ணை திருமணம் செஞ்சிட்டு ஏன்டா வீட்டுக்கு வந்த.. தம்பி என்று பாராமல் துடிதுடிக்க கொன்ற அண்ணன்..!

இதையடுத்து அந்த மாணவனை அழைத்து ஆசிரியர்கள் கவுன்சலிங் கொடுத்தனர். பலமுறை ஆசிரியர்கள் விசாரித்தும் அந்த மாணவன் முதலில் எதுவும் கூறவில்லை. இந்நிலையில், இறுதியில் தன்னை டியூஷன் ஆசிரியை மது கொடுத்து பலாத்காரம் செய்ததாக கடைசியில் கவுன்சலிங் நடத்திய ஆசிரியரிடம் அந்த மாணவன் கூறினான். இதகை கேட்டு சக ஆசிரியர்களும் அதிர்ச்சியடைந்து  மண்ணுத்தி போலீசில் புகார் அளிக்கப்பட்டது.

போலீசார் உடனடியாக அந்த டியூஷன் ஆசிரியையிடம் விசாரணை நடத்தினர். இதில், மாணவனை மது கொடுத்து பலாத்காரம் செய்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

இதையும் படிக்க;-  ஷாக்கிங் நியூஸ்.. வாழைத்தோப்புக்குள் தூக்கிச் சென்று வாயை பொத்தி கதற கதற கல்லூரி மாணவி பலமுறை பலாத்காரம்.!

click me!