குளச்சலில் விதைவை பெண்ணுக்கு விதமாக விதமாக குடைச்சல் கொடுத்த இளைஞர்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்.!

Published : Nov 21, 2021, 05:36 PM IST
குளச்சலில் விதைவை பெண்ணுக்கு விதமாக விதமாக குடைச்சல் கொடுத்த இளைஞர்.. பொறி வைத்து பிடித்த போலீஸ்.!

சுருக்கம்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த விதவை பெண் வசித்து வருகிறார். கடந்த மாதம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஆபாச படங்கள் மற்றும் ஆபாச வாசகங்களையும் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதேபோல், வேறொரு  எண்ணில் இருந்தும்  தொடர்ந்து இதேபோல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். 

விதவை பெண்ணின் செல்போனுக்கு வாட்ஸ் அப் மூலம் ஆபாச படங்கள் அனுப்பிய இளைஞர் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்கப்பட்டார். 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் அருகே உள்ள ரீத்தாபுரம் பகுதியை சேர்ந்த விதவை பெண் வசித்து வருகிறார். கடந்த மாதம் இவரது வாட்ஸ் அப் எண்ணிற்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர், ஆபாச படங்கள் மற்றும் ஆபாச வாசகங்களையும் அனுப்பி தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதேபோல், வேறொரு  எண்ணில் இருந்தும்  தொடர்ந்து இதேபோல் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளனர். 

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண்  காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரை சைபர் கிரைம் போலீசாருக்கு அனுப்பி, சம்பந்தப்பட்ட நபர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அவரது உத்தரவின் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் பாலியல் தொல்லையில் ஈடுபட்ட நபர் குறித்து விசாரிக்கத் தொடங்கியுள்ளனர். விசாரணையில் ரீத்தாபுரம் ஈத்தம்பாட்டைச் சேர்ந்த சதீஷ்(27), இரு வேறு தொலைபேசி எண்களில் இருந்து ஆபாச படங்கள் அனுப்பி பாலியல் தொல்லையில் ஈடுபட்டது தெரியவந்தது.

சதீஷ் வெளிநாட்டில் வேலை பார்த்து விட்டு, தற்போது கூலி வேலை செய்து வருகிறார். இதையடுத்து சதீஷ் மீது தகவல் தொழில்நுட்ப சட்டம் உள்பட 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து நேற்று அவரை கைது செய்தனர். பின்னர் அவர் இரணியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட சதீஷ் ஏற்கனவே இந்த விதவை பெண்ணிடம் தவறாக பேசியது தொடர்பாக குளச்சல் போலீசாரால் கண்டிக்கப்பட்டவர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

Babita Singh Reporting: ஒரு கொலை.. பல சந்தேகங்கள்! வீட்டுக்குள்ளேயே மறைந்திருக்கும் அதிர்ச்சி ரகசியம் – படம் எப்படி இருக்கு?
திருமணத் தடையை நீக்குவதாகக் கூறி இளம் பெண்ணை ஏமாற்றிய ஜோதிடர்..! கோவையில் பரபரப்பு