திருச்சியில் பயங்கரம்.. ஆடு திருடும் கும்பலால் எஸ்எஸ்ஐ கொடூரமாக வெட்டிப் படுகொலை.!

Published : Nov 21, 2021, 08:28 AM ISTUpdated : Nov 21, 2021, 08:31 AM IST
திருச்சியில் பயங்கரம்.. ஆடு திருடும் கும்பலால் எஸ்எஸ்ஐ கொடூரமாக வெட்டிப் படுகொலை.!

சுருக்கம்

 திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக  பூமிநாதன் பணியாற்றி வருகிறாார். இவர் புதுக்கோட்டை கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பலை  பிடிக்க இன்று அதிகாலை 2 மணியளவில் தனி ஆளாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். 

திருச்சி நவல்பட்டு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன் ஆடு திருடும் கும்பலால் வெட்டிப்படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொலையாளிகளை பிடிக்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. 

ஆட்டுக் கறிக்கு நல்ல விலை கிடைப்பதால், திருச்சி மாவட்டத்தின் கிராமப்புறப் பகுதிகளில் ஆடு திருடும் கும்பல்கள் அதிகரித்திருக்கின்றன. குறிப்பாக நவல்பட்டு, திருவெறும்பூர், மணிகண்டம் கிராமப்புறப் பகுதிகளில் ஆடு வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டிருப்பவர்கள், சமீபகாலமாக ஆடு திருடும் கும்பல்களின் அட்டகாசத்தால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். ஆடுகள் சனிக்கிழமை இரவுகளில் திருடப்பட்டு ஞாயிற்றுக்கிழமை காலை முதல் பல்வேறு இடங்களில், ஆட்டுக்கறி விற்பனை நடைபெறுவதாகக் காவல் துறையினருக்குத் தொடர்ந்து புகார்கள் வந்தன. இதையடுத்து, கடந்த சில நாட்களாக, சனிக்கிழமை இரவுகளில் காவல் துறையினர் சிறப்பு ரோந்துப் பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

இதையும் படிங்க;- வீட்டில் குரூப் ஸ்டடி சொல்லிட்டு இரவில் லூட்டி.. பள்ளி மாணவிகள் விஐபிகளுக்கு சப்ளை? வெளியான பகீர் தகவல்.!

இந்நிலையில், திருச்சி நவல்பட்டு காவல் நிலையத்தில் சிறப்பு உதவி ஆய்வாளராக  பூமிநாதன் பணியாற்றி வருகிறாார். இவர் புதுக்கோட்டை கீரனூர் அருகே ஆடு திருடும் கும்பலை  பிடிக்க இன்று அதிகாலை 2 மணியளவில் தனி ஆளாக இருசக்கர வாகனத்தில் விரட்டி சென்றுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த அந்த கும்பல் சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதனை அரிவாளால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச்சென்றனர். ரத்த வெள்ளத்தில் சரிந்த பூமிநாதன் சம்ப இடத்திலேயே துடிதுடித்து உயரிழந்தார்.

இதையும் படிங்க;- அக்னி கலசத்துக்கு பதிலாக தேவர் படம் இருந்திருந்தால் சும்மா இருப்பீர்களா? பாரதிராஜாவை போட்டுத்தாக்கிய அன்புமணி

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார்  பூமிநாதன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவ இடத்தில் திருச்சி சரக ஐஜி பாலகிருஷ்ணன் டிஐஜி உள்ளிட்டோர் நேரில் சென்று ஆய்வு செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை பிடிக்க 2 டிஎஸ்பிக்கள் தலைமையில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஆடு திருடும் கும்பலால்  சிறப்பு உதவி ஆய்வாளர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!