பியூட்டி பார்லரில் வைத்து பள்ளி மாணவியை பதம் பார்த்த கொடூரன்கள்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்.!

Published : Nov 17, 2021, 01:28 PM IST
பியூட்டி பார்லரில் வைத்து பள்ளி மாணவியை பதம் பார்த்த கொடூரன்கள்.. விசாரணையில் வெளியான பகீர் தகவல்கள்.!

சுருக்கம்

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார் 17 வயது மாணவி. இவரது நெருங்கிய தோழியின் பிறந்தநாள் விழாவுக்காக 2 மாதங்களுக்கு முன் மாணவி வீட்டிற்கு சென்றுள்ளார். தோழியின் தாய் காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். அவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.  

பள்ளி மாணவிக்கு ஆசை வார்ததை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள டார்ஜிலிங்கை சேர்ந்த அழகு நிலைய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர். 

சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில் அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருகிறார் 17 வயது மாணவி. இவரது நெருங்கிய தோழியின் பிறந்தநாள் விழாவுக்காக 2 மாதங்களுக்கு முன் மாணவி வீட்டிற்கு சென்றுள்ளார். தோழியின் தாய் காரைக்குடி கல்லூரி சாலையில் உள்ள அழகுநிலையம் ஒன்றில் பொறுப்பாளராக பணியாற்றி வருகிறார். அவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, சிறுமி அடிக்கடி அந்த அழகு நிலையத்திற்கு சென்று வந்துள்ளார். அந்த அழகு நிலையத்தை மேற்குவங்க மாநிலத்தைச் சேர்ந்த மன்ஸிலுடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அப்போது மன்ஸில், மாணவியிடம் ஆசைவார்த்தை கூறி சினிமாவுக்கு அழைத்து செல்வது மற்றும் மது வாங்கி கொடுத்து பாலியல் அத்துமீறல்களில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

ஒரு கட்டத்தில் இந்த பழக்கம் அத்துமீறிப் போக மாணவியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் ரீதியாக பயன்படுத்திக் கொள்ள ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், சிறுமி பள்ளிக்கு வராமல் பல நாட்கள் ஆப்சென்ட் ஆனதாக சிறுமியின் தந்தைக்கு பள்ளி ஆசிரியர் தகவல் அளித்துள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை பள்ளிக்குச் செல்லாதது குறித்து மகளிடம் அடித்து உதைத்து விசாரித்துள்ளார். அப்போது, தந்தையிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். 

 அதிர்ச்சியடைந்த சிறுமியின் தந்தை காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு சென்று மகளுக்கு நேர்ந்த கொடுமைகள் குறித்து புகார் அளித்தார்.இதனையடுத்து, புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், அழகு நிலையத்தின் உரிமையாளரான மேற்குவங்க மாநிலம் டார்ஜிலிங்கை சேர்ந்த மன்ஸில், மற்றும் காரைக்குயை சேர்ந்த விக்னேஷ்(28), சிரஞ்சீவி (31), ஹரீஷ், அழகு நிலைய பொறுப்பாளர் மற்றும் அவரது மகளும் பாதிக்கப்பட்ட மாணவியின் தோழியுமான சிறுமி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

விக்னேஷ், சிரஞ்சீவி, அழகுநிலைய பொறுப்பாளர் ஆகிய 4 போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர். தலைமறைவான முக்கிய குற்றவாளி மன்ஸிலை போலீசார் தேடி வருகின்றனர். இதில், விவகாரத்தில் மேலும் பள்ளி மாணவிகள் பாதிக்கப்பட்டுள்ளனரா என்பது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தால் காரைக்குடி பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. 

PREV
click me!

Recommended Stories

ஏசி வாங்கி தராத காதல் கணவர்.! உயிரை மாய்துகொண்ட 25 வயது இளம்பெண்.! திருவள்ளூரில் நடந்த அதிர்ச்சி சம்பவம்.!
அப்பா.. என்னை காப்பாத்து.. தந்தையிடம் கதறிய 33 வயது சத்யா.. வெறியாட்டம் ஆடிய சக்திவேல்.. யார் இவர்?