
கணவனுடன் அடிக்கடி தகராறு ஏற்படும் போதெல்லாம் போலீசுக்கு போன் போட, தம்பதிகளை சமாதானம் செய்து வைக்க வந்து போன அந்த போலீசுக்கும் பெண்ணுக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தேன்கனிக்கோட்டை தாலுகா அருகே உள்ள தேவகானபள்ளியை சேர்ந்தவர் மஞ்சுநாத்(33). கார் டிரைவர். இவரது மனைவி அனிதா(28). இவர்களுக்கு திருமணமாகி 8 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். மஞ்சுநாத்திற்கு குடிப்பழக்கம் உள்ளது. இதனால், கணவன் மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
இதுகுறித்து அனிதா தனி போலீசில் புகாரளித்தார். இதையடுத்து, கணவன் மனைவியிடையே சமாதானம் செய்ய வந்த போலீஸ்காரர் ஒருவருக்கும் அனிதாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. நாளடைவில் இந்த விவகாரம் கணவருக்கு தெரியவந்ததையடுத்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் மஞ்சுநாத் தளி காவல் நிலையம் முன்பு தற்கொலை செய்ய முயன்றார். அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்து காப்பாற்றினர்.
இந்த சம்பத்தின் தொடர்ச்சியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் அனிதா வீட்டிற்கு சமரசம் பேச சென்ற போலீஸ்காரர் மீது அப்போது பணியிடை நீக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இந்நிலையில், தளி ஓசூர் சாலையில் தனியார் பள்ளி அருகே உள்ள சானபோகனப்பள்ளி பேருந்து நிறுத்தம் அருகே நேற்று மஞ்சுநாத் முகத்தில் வெட்டு காயங்களுடன் சடலமாக ரத்த வெள்ளத்தில் கிடந்தார். இது தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மஞ்சுநாத் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மஞ்சுநாத்தை கடத்தி கொலை செய்துவிட்டு சடலத்தை அங்கு கொண்டு வந்து போட்டுச்சென்றுள்ளது தெரியவந்தது. விசாரணைக்காக மஞ்சுநாத்தின் வீட்டிற்கு சென்றபோது வீடு பூட்டப்பட்டிருந்தது. அவரது மனைவி அனிதாவை காணவில்லை. கள்ளக்காதல் விவகாரத்தில் அனிதா கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள அளிதா தனிப்படை அமைத்து போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.