6 மாதங்களில் மாமனார் உட்பட 400 பேரின் காமப் பசிக்கு இரையான 16 வயது சிறுமி.. வெளிவந்த பகீர் செய்தி..!

Published : Nov 16, 2021, 04:05 PM ISTUpdated : Nov 16, 2021, 04:06 PM IST
6 மாதங்களில் மாமனார் உட்பட 400 பேரின் காமப் பசிக்கு இரையான 16 வயது சிறுமி.. வெளிவந்த பகீர் செய்தி..!

சுருக்கம்

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின்  தாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அதனால், அவரை அதேபகுதியை  சேர்ந்த ஒருவருக்கு அவரது தந்தை திருமணம் செய்து வைத்தார். கிட்டத்தட்ட ஒரு  வருடமாக அவரது மாமியார் வீட்டில் சிறுமி வசித்து வந்தார். அப்போது, மாமனாரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் சில மாதங்களில் பிறந்த வீட்டிற்கு வந்து விட்டார். 

மகாராஷ்டிராவில் போலீஸ்காரர் உட்பட 400 பேரால் திருமணமான 16 வயது சிறுமி கடந்த 6 மாதங்களாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் பீட் மாவட்டத்தை சேர்ந்த 16 வயது சிறுமியின்  தாய் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். அதனால், அவரை அதேபகுதியை  சேர்ந்த ஒருவருக்கு அவரது தந்தை திருமணம் செய்து வைத்தார். கிட்டத்தட்ட ஒரு  வருடமாக அவரது மாமியார் வீட்டில் சிறுமி வசித்து வந்தார். அப்போது, மாமனாரின் பாலியல் தொல்லை தாங்க முடியாமல் சில மாதங்களில் பிறந்த வீட்டிற்கு வந்து விட்டார். 

சில நாட்களுக்குப் பிறகு வேலை தேடி அம்பஜோகை நகருக்குச் சென்றார். அங்கு, அந்த சிறுமிக்கு வேலை தருவதாக உறுதியளித்து 2 ஆண்கள் அவரை பாலியல்  பலாத்காரம் செய்தனர். ஆனால், அவர்கள் கூறியபடி வேலை வாங்கித் தரவில்லை. குறிப்பிட்ட இடத்தில் தங்கியிருந்த அந்த சிறுமியை கடந்த 6 மாதத்தில் ஒரு  போலீஸ்காரர் உட்பட 400 பேர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

கடந்த ஜனவரி  29 முதல் செப்டம்பர் 22ம் தேதி வரை டோம்பிவலியின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த  சுமார் 33 இளைஞர்கள் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். இந்தாண்டு  ஜனவரி மாதம் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வீடியோவை ஒரு கும்பல்  எடுத்துள்ளது. அந்த கும்பல் அந்த வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டதால்,  பாதிக்கப்பட்ட சிறுமியின் விபரம் போலீசுக்கு தெரியவந்தது. அதையடுத்து  போலீசார் அந்த சிறுமியை தேடிப் பிடித்து அவரிடம் விசாரணை நடத்தி  வருகின்றனர்.  தற்போது அந்த சிறுமி இரண்டு மாத கர்ப்பிணியாக உள்ளார். 

இதனையடுத்து, சிறுமி கொடுத்த புகாரின் பேரில் குழந்தை திருமண சட்டம், பலாத்காரம், பாலியல் துன்புறுத்தல் மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் 4 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சிறுமியின் கருவைக் கலைக்க, குழந்தைகள் நல்வாழ்வுக் குழு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சிறுமியை 6 மாதங்களாக 400 பேர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

கதறிய மருமகள் நிகிலா.. விடாத 52 வயது மாமனார்.. ரசித்த மகன் பிரதீப்.. அமமுக பிரமுகர்கள் வெறியாட்டம்
நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்