வாயில் துணியை வைத்து 11ம் வகுப்பு மாணவி கதற கதற பலாத்காரம்.. புருஷனுக்காக அத்தை செய்த வேலையை பார்த்தீங்களா?

Published : Apr 23, 2022, 01:55 PM ISTUpdated : Apr 23, 2022, 01:56 PM IST
வாயில் துணியை வைத்து 11ம் வகுப்பு மாணவி கதற கதற பலாத்காரம்.. புருஷனுக்காக அத்தை செய்த வேலையை பார்த்தீங்களா?

சுருக்கம்

அங்கு மாணவியிடம் கவிதா உன் மீது மாமா ஆசைப்படுகிறார். அதனால் நீ அவர் சொல்வதை எல்லாம் கேள் ன்று சிறுமியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு சிறுமி மறுத்துள்ளார். அப்படி இல்லை என்றால் உங்க அம்மாவை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். தொடர்ந்து  சிறுமியை வீட்டினுள் அடைத்து கவிதா வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. 

அத்தை வீட்டிற்கு சென்ற 11ம் வகுப்பு மாணவி வாயில் துணியை வைத்து கதற கதற பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக அவரது மாமா மற்றும் அத்தை கைது செய்யப்பட்டுள்ளனர்.

மிரட்டி பள்ளி மாணவி பலாத்காரம்

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே ஆம்புலன்ஸ் டிரைவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவருக்கு 2 மனைவிகள் உள்ளனர். இதில், முதல் மனைவிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளன. அதில் 16 வயது மூத்த மகள் தருமபுரி அரசு பள்ளியில் 11ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், 11ம் வகுப்பு மாணவி தற்போது குள்ளனூரில் உள்ள தனது அத்தை வீட்டில் இருந்து பள்ளிக்கு சென்று வருகிறார். இவரது கணவர் டெம்போ டிரைவர் ஓம்சக்தி. இதையடுத்து கடந்த 11-ம் தேதி அன்று பள்ளியில் இருந்து மாணவி வீட்டிற்கு வந்தார். அப்போது அவரது அத்தை கவிதா அந்த மாணவியிடம் உன்னை மாமா கூப்பிடுகிறார் என்று அழைத்து சென்றுள்ளார்.

போலீசில் புகார்

அங்கு மாணவியிடம் கவிதா உன் மீது மாமா ஆசைப்படுகிறார். அதனால் நீ அவர் சொல்வதை எல்லாம் கேள் ன்று சிறுமியிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு சிறுமி மறுத்துள்ளார். அப்படி இல்லை என்றால் உங்க அம்மாவை கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். தொடர்ந்து  சிறுமியை வீட்டினுள் அடைத்து கவிதா வெளியே தாழ்ப்பாள் போட்டு விட்டு சென்றதாக கூறப்படுகிறது. இதனால், கத்தி கதறி அழுதுள்ளார். ஆனால் வலுக்கட்டாயமாக மாணவியை இழுத்து சென்று படுக்கை அறைக்கு தூக்கி சென்றுள்ளார். அங்கு வாயில் துணியை வைத்து அடைத்து மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இதனையும் மீறி நீ உன் பெற்றோரிடம் கூறினால் உன்னையும் கொலை செய்து விடுவோம் என்று கூறியதாக கூறப்படுகிறது.

போக்சோவில் கைது

இதனையடுத்து, தந்தை வீட்டுக்கு சென்ற பின்னர் நடந்த சம்பவத்தை எடுத்து கூறி மகள் கதறி அழுதுள்ளார். இது குறித்து மாணவியின் பெற்றோர் தருமபுரி அனைத்து மகளிர் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து ஓம் சக்தி, கவிதா ஆகிய 2 பேரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

PREV
click me!

Recommended Stories

Salem Crime: இரண்டு குழந்தைகளை பெற்றும் அடங்காத 23 வயது லலிதா.. அலறிய சேலம்.. நடந்தது என்ன?
Chennai Crime: ரயில் நிலையத்தில் சூட்கேஸில் தலையில்லாத சடலம்! கணவனை துண்டு துண்டாக வெட்டி கொன்றது ஏன்? சிக்கிய மனைவி பகீர்