
உத்திர பிரதேச மாநிலத்தில் இரண்டு வயது சிறுமி உள்பட ஒரே குடும்பத்தை சேர்ந்த ஐந்து பேர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அரங்கேறி இருக்கிறது. நள்ளிரவில் நடைபெற்று இருக்கும் கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
உத்திர பிரதேச மாநிலத்தின் பிரயாக்ராஜ் மாவட்டத்தின் குவாஜ்பூர் பகுதியில் ராம்குமார் யாதவ் (55), இவரின் மனைவி குசும் தேவி (52), மகள் மனிஷா (25), மகன் சுனில் (30), மருமகள் சவிதா (27) மற்றும் பேத்தி சாக்ஷி (5) மற்றும் மீனாக்ஷி (2) குடும்பத்தால் வசித்து வந்தனர்.
உயிர் பிழைத்த சிறுமி:
கொலை சம்பவத்தில் ஐந்து வயதான சாக்ஷி மட்டும் உயிர் பிழைத்து இருக்கிறார். மேலும் மகன் சுனில் அப்போது வீட்டில் இல்லை. குடும்பத்தில் உயிரிழந்தவர்கள் உடலை கைப்பற்றி. பிரேத பரிசோதனைக்காக போலீசார் அனுப்பி இருக்கின்றனர். மேலும் இந்த கொடூரமான கொலை சம்பவத்தில் விசாரணை நடத்த ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
"உயிரிழந்தவர்கள் அனைவரும் தலையில் தாக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டு உள்ளன. இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்களை கைது செய்ய ஏழு தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன," என்று மூத்த காவல் துறை அதிகாரி அஜய் குமார் தெரிவித்து இருக்கிறார்.
விசாரணை:
மேலும் மோப்ப நாய்கள், தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க ஏதேனும் தடையங்கள் கிடைக்குமா என அங்கிருந்த பொருட்களை சேகரித்து சென்று உள்ளனர். மாவட்ட நீதிபதி சஞ்சய் குமார் காத்ரி குற்ற சம்பவம் நடந்த பகுதிக்கு உடனடியாக விரைந்து இருக்கிறார். யாதவ் வீட்டில் தீப் பற்றி எரிந்ததாகவும், அதன் பின் தகவல் அளித்ததாக அக்கம் பக்கத்தில் வசிப்போர் தன்னிடம் தெரிவித்தாக கூறினார்.
மாவட்ட நீதிபதி:
"தீ விபத்து ஏற்பட்டதும் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு விட்டது. போலீஸ் மற்றும் தீயணைப்பு குழுவினர் அங்கு வந்ததும், வீட்டில் உயிரிழந்தோர் சடங்களை கண்டெடுத்தனர். தீப் பற்றி எரிந்த அறையின் அருகில் சிறுமி மற்றும் அவரின் தாயார் உடல் இருந்துள்ளது. யாதவ் மற்றும் அவரின் மனைவி உயிருக்கு போராடி வந்துள்ளனர். பின் அவர்களது மகளின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இந்த சம்பவத்திற்கு முன் விரோதம் காரணமாக இருக்குமா என இதுவரை எந்த தகவலும் கிடைக்கவில்லை," என மாவட்ட நீதிபதி தெரிவித்தார்.
முன்னதாக ஏப்ரல் 16 ஆம் தேதி ககல்பூர் கிராமத்தில் 38 வயதான தாய் ப்ரீதி திவாரி மற்றும் மஹி (12), பிஹூ (8) மற்றும் குஹூ (3) மகள்கள் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில், உயிரிழிந்து கிடந்தனர். இவரின் கணவர் ராகுல் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டார். விசாரணையில், இந்த குடும்பத்தார் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.