சிறுமியை சீரழித்த 86 வயது கிழவன்.. சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

Published : Apr 23, 2022, 12:38 PM IST
சிறுமியை சீரழித்த 86 வயது கிழவன்.. சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு.!

சுருக்கம்

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (86). இவர் கடந்த 2020ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வந்த சிறுமிக்கு பாலியல்  வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். 

அரியலூரில் 9 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில் முதியவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது. 

சிறுமி பாலியல் வன்கொடுமை

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தைச் சேர்ந்தவர் குப்புசாமி (86). இவர் கடந்த 2020ம் ஆண்டு அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு வந்த சிறுமிக்கு பாலியல்  வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளார். 

போக்சோவில் கைது

இதனால் பயந்துபோன் சிறுமி அடிக்கடி சோர்வடைந்து காணப்பட்டார். இதனால், மகளின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த அவரது தாயார் இது குறித்து விசாரித்துள்ளார். அப்போது, கதறியபடி நடந்தவற்றை கூறியுள்ளார். இதனால், அதிர்ச்சியடைந்த தாய் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குப்புசாமியை போக்கோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர். இது தொடர்பான வழக்கு அரியலூர் மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில்  தீர்ப்பு வழக்கப்பட்டது.

சாகும் வரை ஆயுள் தண்டனை

இந்த தீர்ப்பில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் குப்புசாமிக்கு சாகும்வரை ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம்  உத்தரவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து குப்புசாமி திருச்சி மத்திய சிறைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் 86 வயது முதியவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க;- ஓயாத டார்ச்சர்.. உடலுறவுக்கு மறுப்பு.. வெறியில் இருந்த கள்ளக்காதலன் ஆசிட்டை எடுத்து எங்கு ஊற்றினார் தெரியுமா?

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!