ரேஷன் கார்டு விண்ணப்பித்த பெண்ணுக்கு ரூட் போட்ட அரசு ஊழியர்.. வீட்டுக்கே சென்று செய்த வேலை பார்த்தீங்களா?

By vinoth kumar  |  First Published May 9, 2022, 3:07 PM IST

அயாத் பாஷாவிடம் ஆவணங்களை எடுத்து வந்து கொடுத்தபொது தான் ஒரு அரசு ஊழியர் என்றும் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் சம்மதா? எனக்கேட்டு அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. அந்தபெண் கத்தி கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் திரண்டனர்.


சென்னை வண்ணாரப்பேட்டையில் குடும்ப அட்டை கேட்டு விண்ணபித்த பெண்ணிடம் ஆவணங்களை சரிபார்ப்பதற்காக சென்ற ரேசன் ஊழியர் அத்துமீறயதால் அப்பகுதி மக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.

சென்னை புதுவண்ணாரப்பேட்டையை சேர்ந்த 25 வயதுடைய இளம்பெண். இவர் லோகேஷ் என்ற இளைஞரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால், லோகேஷ் கடந்த டிசம்பர் மாதம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் லோகேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். கணவனை இழந்த அந்த பெண் தனது தாய் வீட்டின் அருகே வீடு வாடகை எடுத்து தனது கை குழந்தையுடன் வசித்து வருகிறார். 

Tap to resize

Latest Videos

இந்நிலையில், அந்த இளம்பெண் குடும்ப அட்டைக்காக ஆன்லைன் மூலம்  விண்ணப்பித்துள்ளார்.  ஆவணங்களை சரி பார்ப்பதற்காக புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் உணவு பொருள் வழங்கல் மற்றும் பாதுகாப்பு துறை அலுவலகத்தில் பணிபுரியும்  45 வயதுடைய இளை நிலை உதவியாளர்  மாற்றுத் திறனாளியான அயாத் பாஷா என்பவர் இளம்பெண் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர்  ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களை சரி பார்ப்பதற்காக ஆவணங்கள் மற்றும் கேஸ் பில் ஆகியவற்றை அயாத் பாஷா  பிரியா லட்சுமியிடம் கேட்டு  உள்ளார். 

undefined

அயாத் பாஷாவிடம் ஆவணங்களை எடுத்து வந்து கொடுத்தபொது தான் ஒரு அரசு ஊழியர் என்றும் மாதம் 40 ஆயிரம் ரூபாய் சம்பளம் வாங்குகிறேன் சம்மதா? எனக்கேட்டு அந்த பெண்ணின் கையை பிடித்து இழுத்ததாக கூறப்படுகிறது. அந்தபெண் கத்தி கூச்சலிட்டதும் அக்கம் பக்கத்தினர் திரண்டு அயாத் பாஷாவை அடித்து உதைத்தனர். இதனையடுத்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார்  சம்பவம் இடத்திற்கு விரைந்து வந்து போலீசார் அயாத் பாஷா வை மீட்டு  காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் குறித்து பிரியா லட்சுமி  புதுவண்ணாரப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அயாத் பாஷாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

click me!