போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.!

Published : May 09, 2022, 01:42 PM IST
போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை.. பதற்றம்.. போலீஸ் குவிப்பு.!

சுருக்கம்

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜவஹர். இவர் மீது 2 கொலை, கொள்ளை, கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஜவஹர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். 

போலீசாரால் தேடப்பட்டு வந்த பிரபல ரவுடி ஜவஹர் கத்தியால் குத்தியும், வெட்டியும் கொடூரமான முறையில்  படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அடுத்த வேண்பாக்கம் பள்ளம் பகுதியை சேர்ந்தவர் ஜவஹர். இவர் மீது 2 கொலை, கொள்ளை, கஞ்சா வழக்குகள் உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருந்து வருகிறது. இந்நிலையில், நேற்று இரவு ஜவஹர் கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தார். 

இதுகுறித்து பொன்னேரி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் ஜவஹர் உடலை கைப்பற்றி  பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தொழில் போட்டி காரணமாக கொலை நடைபெற்றதா?  அல்லது முன்விரோதம் காரணமாக நடைபெற்றதா? என்ற கோணத்தில் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர். 

கடந்த மாதம் ஏப்ரல் 26-ம் தேதி வேன் பாக்கம் பள்ளம் பகுதியில் கார்த்திக் என்பவரது வீட்டில் சுமார் ஒன்றரை கிலோ கஞ்சா மற்றும் அனுமதி பெறாத நாட்டுத்துப்பாக்கி வைத்திருந்ததை பொன்னேரி போலீசார் பறிமுதல் செய்து கார்த்திக்கை கைது செய்து பொன்னேரி போலீசார் சிறையில் அடைத்தனர். இதில், தப்பி ஓடிய ஜவகரை கஞ்சா மற்றும் நாட்டு துப்பாக்கி வைத்திருந்த வழக்கில் போலீசார் தேடி வந்த நிலையில் தற்போது மர்ம நபர்களால் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

உடற்கல்வி ஆசிரியருடன் சௌமியா.! வீட்டிற்கு வந்தும் எந்நேரமும் ஓயாமல்! விஷயம் தெரிந்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
கலகலப்பு பட பாணியில் திருட்டு.. ஃபேன் ஓட்டையில் சிக்கி தலைகீழாக தொங்கிய இளைஞர்!