"நான் உன்னுடைய பொண்ணுப்பா.. இதெல்லாம் தப்பு".. தலைக்கேறிய போதையால் மகளை பலாத்காரம் செய்த தந்தை.!

Published : May 09, 2022, 01:02 PM ISTUpdated : May 09, 2022, 01:03 PM IST
"நான் உன்னுடைய பொண்ணுப்பா.. இதெல்லாம் தப்பு".. தலைக்கேறிய போதையால் மகளை பலாத்காரம் செய்த தந்தை.!

சுருக்கம்

கூலித்தொழிலாளி வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர் வீட்டில் தனியாக இருந்த தனது மூத்த மகளை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்தார். இதை வெளியில் சொல்ல முடியாமல் இளம்பெண் கடும் உளைச்சலுக்கு ஆளாகினார்.

பெற்ற மகளை குடிபோதையில் இருந்த தந்தை பலாத்காரம் செய்ததால் அவமானம் தாங்க முடியாமல் மகள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

குடிபோதை தந்தை

உத்தரபிரதேச மாநிலம் பாந்தா பகுதியில் 49 வயதான கூலித்தொழிலாளி ஒருவர் வசித்த வருகிறார். இவருக்கு 2 மகள்கள் உள்ளனர். இந்த கூலித்தொழிக்கு மதுப்பழக்கம் இருந்துவந்துள்ளது. தினமும் குடித்துவிட்டு வீட்டுக்கு வரும் இவர் தனது மகள்களிடம் சண்டையிட்டு அடித்து உதைத்துள்ளார். 

மகள் பலாத்காரம்

இந்நிலையில், கடந்த புதன்கிழமை இரவு அந்த கூலித்தொழிலாளி வழக்கம்போல குடித்துவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மதுபோதையில் இருந்த அவர் வீட்டில் தனியாக இருந்த தனது மூத்த மகளை பாலியல் பாலியல் வன்கொடுமை செய்தார். இதை வெளியில் சொல்ல முடியாமல் இளம்பெண் கடும் உளைச்சலுக்கு ஆளாகினார். தனக்கு நடந்த கொடுமையை தனது தங்கையிடம் கூறி அந்த அக்கா கதறி அழுதுள்ளார். 

தற்கொலை

இந்நிலையில், வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்து பார்த்த தங்கை அக்கா சடலமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்து கூச்சலிட்டு கதறினார். இதுதொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இளம்பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து, அக்கா தற்கொலை தொடர்பாக தங்கை காவல் நிலையத்தில் புகார் அளித்துதுள்ளார். போலீசார் அந்த புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

நான் உனக்கு போதாதா! என் பொண்ணு கேக்குதா.. ஆத்திரத்தில் 46 வயது ஆன்டி.. அலறிய சூர்ய பிரதாப் சிங்
சார்.. நான் உங்க ஸ்டூடண்ட்ஸ்.! இப்படியெல்லாம் பண்ணாதீங்க! எவ்வளவு சொல்லியும் கேட்காத ஆசிரியருக்கு செருப்பு மாலை