ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சரின் மகன் மீது பலாத்கார புகார்.. ரூம் போட்டு நாசம் செய்ததாக இளம்பெண் கதறல்.!

By vinoth kumar  |  First Published May 9, 2022, 10:27 AM IST

இளம்பெண்ணை சவாய் மாதோபூருக்கு வரும்படி கடந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி ரோகித் கூறியுள்ளார்.
அப்போது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார்.  மறுநாள் காலையில் எழுந்தபோது, ஆடையின்றி இருந்த இளம்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னிடம் காட்டியதாக புகாரில் குறிப்பிட்டார்.


பேஸ்புக்கில் அறிமுகமான இளம்பெண்ணை குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து பாலியல் பலாத்காரம் செய்ததாக ராஜஸ்தான் அமைச்சரின் மகன் மீது டெல்லி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

அமைச்சர் மகன் மீது  புகார்

Tap to resize

Latest Videos

undefined

ராஜஸ்தானில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக சோக் கெலாட் இருந்து வருகிறார். இந்நிலையில், அவரது அமைச்சரவையில் பொது சுகாதார துறைக்கான அமைச்சராக இருப்பவர் மகேஷ் ஜோஷி.  இவரது மகன் ரோகித் ஜோஷி (23). இவருக்கு எதிராக டெல்லி போலீசில் இளம்பெண் பாலியல் புகார் அளித்துள்ளார்.

குளிர்பானத்தில் மயக்க மருந்து கொடுத்து பலாத்காரம்

அதில், கடந்த ஆண்டு பேஸ்புக் வழியே இருவருக்கும் இடையே அறிமுகம் ஏற்பட்டுள்ளது.  அதன்பின் இருவரும் மாறி மாறி போனில் பேசிவந்தோம்.  முதன்முறையாக ஜெய்ப்பூரில் சந்தித்து  பேசிடியுள்ளனர்.  இதனையடுத்து, இளம்பெண்ணை சவாய் மாதோபூருக்கு வரும்படி கடந்த ஆண்டு ஜனவரி 8ம் தேதி ரோகித் கூறியுள்ளார். அப்போது, குளிர்பானத்தில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பலாத்காரம் செய்துள்ளார்.  மறுநாள் காலையில் எழுந்தபோது, ஆடையின்றி இருந்த இளம்பெண்ணின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை தன்னிடம் காட்டியதாக புகாரில் குறிப்பிட்டார்.

மிரட்டல்

மற்றொரு முறை கணவன், மனைவி என எங்களுடைய பெயர்களை பதிவு செய்து கொண்டு, ஓட்டல் ஒன்றில் என்னை தங்க வைத்த அவர், என்னை திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.  கடந்த ஆண்டு பலமுறை அமைச்சரின் மகன் தன்னை பலாத்காரம் செய்ததாகவும் புகாரில் தெரிவித்துள்ளார். மேலும், என்னை அடித்தும், ஆபாச படங்களையும் எடுத்து வைத்துள்ளார்.  அதனை சமூக ஊடகங்களில் பதிவேற்றி, வைரலாக்கி விடுவேன் என மிரட்டியுள்ளார். 

இதையும் படிங்க;- உல்லாசத்தின் போது ஏற்பட்ட தகராறு... நிர்வாண நிலையில் அண்ணியை கொடூரமாக குத்திக்கொன்ற கள்ளக்காதலன்.!

போலீஸ் வழக்குப்பதிவு

இதையடுத்து ரோஹித் ஜோஷி மீது கற்பழிப்பு, போதை மருந்துகளால் காயப்படுத்துதல், கருச்சிதைவு ஏற்படுத்துதல்,  இயற்கைக்கு மாறான குற்றங்கள், கிரிமினல் மிரட்டல் மற்றும் மானபங்கம் செய்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வடக்கு டெல்லி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.  இந்த வழக்கு குறித்து ராஜஸ்தான் காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சியை சேர்ந்த அமைச்சரின் மகன் மீது பாலியல் புகாதர் தெரிவிக்கப்பட்டுள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இதையும் படிங்க;- "உனது மனைவியுடன் நான் நெருக்கமாக இருக்க போட்டோ இருக்கு".. மிரட்டிய அமமுக நகர செயலாளரை அலேக்கா தூக்கிய போலீஸ்.!

 

click me!