3 மாதமாக போட்ட ப்ளான்.. சென்னையில் நடந்த ஹைடெக் இரட்டை கொலை.. வெளியான புதிய பரபரப்பு தகவல்கள்..!

Published : May 09, 2022, 09:21 AM ISTUpdated : May 09, 2022, 09:23 AM IST
3 மாதமாக போட்ட ப்ளான்.. சென்னையில் நடந்த ஹைடெக் இரட்டை கொலை.. வெளியான புதிய பரபரப்பு தகவல்கள்..!

சுருக்கம்

ஆடிட்டர் வீட்டிற்கு வந்ததும் தனது மனைவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது காரில் இருந்து கொண்டு வந்த 5 சூட்கேஸ்களை டிரைவர் கிருஷ்ணா வீட்டின் தரைத்தளத்தில் கொண்டு வந்து வைத்தார். பிறகு வீட்டின் பின்புறம் அறையில் பதுங்கி இருந்த ரவி ராய் உதவியுடன் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தலையில் அடித்து ரூ.40 கோடி பணம் குறித்து கேட்டுள்ளனர். 

நகைகளை விற்று பணமாக்கி வாழ்க்கையில் செட்டில் ஆகி விட வேண்டும் என்ற எண்ணத்தில் நேபாளத்துக்கு காரிலேயே செல்ல திட்டமிட்டதாக கைதான கார் டிரைவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை மயிலாப்பூர் பிருந்தாவன் கார்டன் பதியை சேர்ந்தவர் ஸ்ரீகாந்த் (60). ஆடிட்டரான இவர், ஐடி நிறுவனம் நடத்தி வந்தார். இவருக்கு அனுராதா(55) என்ற மனைவி, மகள் சுனந்தா, மகன் சஸ்வத் ஆகியோர் உள்ளனர்.  மகன் மற்றும் மகள் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். அமெரிக்காவில் வசித்து வரும் மகள் சுனந்தா பிரசவத்திற்காக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் ஸ்ரீகாந்த் தனது மனைவி அனுராதா உடன் அமெரிக்கா சென்று நேற்று  முன்தினம் அதிகாலை சென்னை வந்த நிலையில் இருவரும் கொடூரமாக துறையில்  தங்களது கார் ஓட்டுநரால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

ஆடிட்டரை கொலை செய்தது குறித்து நேபாளம் நாட்டை சேர்ந்த கார் ஓட்டுநர் கிருஷ்ணா போலீசிடம் அளித்த வாக்குமூலத்தில்;-  நேபாளம் பீர்பா மாவட்டம் நாராயண்பூர் கிராமத்தை சேர்ந்தவர் லால் சர்மா(70). இவர் தனது மனைவியுடன், ஆடிட்டர் ஸ்ரீகாந்த்தின் நெமிலிச்சேரி அருகே உள்ள சூளேரிக்காடு பண்ணை வீடடில் கடந்த 20 ஆண்டுகளாக செக்யூரிட்டியாக வேலை செய்து வருகிறார். இந்த பழக்கத்தில் தனது மகன் பதம்லால் கிஷன்(எ) கிருஷ்ணாவை ஸ்ரீகாந்தின் கார் டிரைவராக சேர்த்துள்ளார்.  அதன்படி கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக ஆடிட்டர் ஸ்ரீகாந்த் வீட்டின் பின்புறம் உள்ள அறையில் தங்கி கார் ஓட்டி வந்தார்.

கிருஷ்ணா 20 ஆண்டுகளாக சென்னையில் இருந்ததால் தமிழ் பெண்ணை திருமணம் செய்து பிரிந்துவிட்டார். அவருக்கு 15 வயதில் மகன் உள்ளான்.  மகன் மட்டும் டார்ஜிலிங்கில் உள்ள ஒரு பள்ளியில் 10 ம் வகுப்பு படித்து வருகிறார். ஆடிட்டர் தனது மகள் பிரசவத்திற்காக கடந்த நவம்பர் மாதம் தனது மனைவியுடன் அமெரிக்கா சென்றார். அப்போது, ஸ்ரீகாந்த் நாங்கள் வர சில மாதங்கள் ஆகலாம். ஆகையால்,  கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள பண்ணை வீட்டையும், மயிலாப்பூரில் உள்ள பங்களா வீட்டையும் பார்த்துக் கொள்ளுமாறு கூறி விட்டு சென்றனர். 2 வீடுகளையும் நானே பார்த்துக் கொண்டேன்.

ஸ்ரீகாந்த் வசதியானவர். வீட்டில் கிலோ கணக்கில் நகைகளை வாங்கி வைத்திருந்தார். இது எனது கண்ணை உறுத்தியது. அந்த நகைகளை கொள்ளையடிக்க எனது நண்பர் ரவியுடன் சேர்ந்து திட்டம் போட்டேன். கடந்த 3 மாதமாக இதற்காக திட்டம் தீட்டினோம். அமெரிக்காவில் இருந்து ஸ்ரீகாந்தும் அவரது மனைவியும் எப்போது சென்னை திரும்புவார்கள்? போட்டுத் தள்ளலாம் என காத்திருந்தோம்.

இந்நிலையில், ஆடிட்டர் தனது மனைவியுடன் அமெரிக்காவில் இருந்து நேற்று முன்தினம் அதிகாலை சென்னை வருவதாக டிரைவர் கிருஷ்ணாவிற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.  திட்டமிட்டப்படி ஆடிட்டர் தம்பதியை கொலை செய்து பண்ணை வீட்டில் புதைக்க பண்ணை வீட்டில் பள்ளம் தோண்டி வைத்திருந்தனர். ரவிராய் மயிலாப்பூர் வீட்டில் கிருஷ்ணா தங்கி இருந்த அறையில் உருட்டுக்கட்டையுடன் பதுங்கி இருந்தார். பின்னர் திட்டமிட்டப்படி நேற்று முன்தினம் அதிகாலை 3.30 மணிக்கு கிருஷ்ணா சென்னை விமான நிலையத்தில் இருந்து ஆடிட்டர் மற்றும் அவரது மனைவியை கார் மூலம் மயிலாப்பூர் வீட்டிற்கு அழைத்து வந்தார்.

ஆடிட்டர் வீட்டிற்கு வந்ததும் தனது மனைவியுடன் கதவை திறந்து உள்ளே சென்றார். அப்போது காரில் இருந்து கொண்டு வந்த 5 சூட்கேஸ்களை டிரைவர் கிருஷ்ணா வீட்டின் தரைத்தளத்தில் கொண்டு வந்து வைத்தார். பிறகு வீட்டின் பின்புறம் அறையில் பதுங்கி இருந்த ரவி ராய் உதவியுடன் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் மற்றும் அவரது மனைவியை கத்தி மற்றும் உருட்டுக்கட்டையால் தலையில் அடித்து ரூ.40 கோடி பணம் குறித்து கேட்டுள்ளனர். பதில் கூறவில்லை. இதனால், ஆத்திரமடைந்து இருவரையும் உருட்டுக்கட்டையால் அடித்து கொலை செய்தோம். 

பிறகு லாக்கரில் இருந்து தங்கம், வைரம், வெள்ளி நகைகளை ஒரு பையில் எடுத்துக்கொண்டனர். கொலை செய்யப்பட்ட அனுராதா மற்றும் அவரது கணவர் ஆடிட்டர் ஸ்ரீகாந்த் உடலை தனித்தனியாக போர்வையால் கட்டி ஒரு சாக்கு மூட்டையில் ரத்தம் வெளியே சிந்தாதபடி காரில் ஏற்றினர். அதன் பிறகு ஆடிட்டர் தம்பதியின் உடல்கள் மற்றும் நகைகள் அடங்கிய பைகளுடன்  மாமல்லபுரம் அடுத்த நெமிலிச்சேரி அருகே உள்ள சூளேரிக்காடு பண்ணை வீட்டிற்கு வந்தனர். ஏற்கனவே தோண்டப்பட்ட குழியில் ஆடிட்டர் தம்பதியின் உடல்களை தள்ளி மண்ணை போட்டு மூடினர். அனைத்து வேலைகளும்  முடிந்த உடன் இருவரும் தங்களது கையுறைகளை தீ வைத்து எரித்துவிட்டு, காரில் நேபாளம் புறப்பட்டனர். ஆனால் போலீசார் இவர்கள் பயன்படுத்திய செல்போன் மற்றும் காரின் பதிவு எண்கள் மூலம் சுங்கச்சாவடியை கடந்து செல்லும் சிசிடிவி பதிவுகளை வைத்து பிடித்துவிட்டனர் என தெரிவித்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

பெற்ற குழந்தையை கொன்ற கொடூர தாய்.. கோர்ட் வழங்கிய பரபரப்பு தீர்ப்பு.. கள்ளக்காதலன் எஸ்கேப்..
லெஸ்பியன் உறவு! மால்தி தேவியுடன் மனைவி உல்லாசம்! நேரில் பார்த்த கணவர்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!