அடிப்பாவி.. உல்லாசத்துக்கு இடையூறு.. தாலி கட்டிய கணவரையே கூலிப்படை ஏவி போட்டு தள்ளிய வெறி பிடித்த மனைவி.!

Published : May 09, 2022, 07:39 AM ISTUpdated : May 09, 2022, 07:50 AM IST
அடிப்பாவி.. உல்லாசத்துக்கு இடையூறு.. தாலி கட்டிய கணவரையே கூலிப்படை ஏவி போட்டு தள்ளிய வெறி பிடித்த மனைவி.!

சுருக்கம்

விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் கோபாலை அவரது மனைவி சுசீலா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவரை கூலிப்படை வைத்து கொலை செய்த மனைவி உள்பட 6 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளனர்.

வாலிபர் படுகொலை

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள சின்னக்கரை லட்சுமி நகர் பகுதியில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடப்பதாக பல்லடம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு ரத்த காயங்களுடன் உயிரிழந்து கிடந்த வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பல்லடம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க;- நண்பனின் மனைவி குளிப்பதை வீடியோ எடுத்து மிரட்டி உல்லாசம்.. எவ்வளவு சொல்லியும் கேட்காமல் ஓயாத டார்ச்சர்..!

கூலிப்படையை ஏவிய மனைவி

போலீசார் விசாரணையில் வாலிபரை மர்மநபர்கள் கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்தது. சம்பவ குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் கொலை செய்யப்பட்டவர் கொடைக்கானலை சேர்ந்த ராமநாதன் மகன் கோபால் (35) என்பதும், கடந்த 10 வருடங்களாக பல்லடம் அருகேயுள்ள அருள்புரம் செந்தூரான் காலனியில் உள்ள பனியன் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். மேலும் மனைவி சுசீலா மற்றும் 10 வயதான மகன் மற்றும் 7 வயதான மகளுடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், விசாரணையில் கள்ளக்காதல் பிரச்சினையில் கோபாலை அவரது மனைவி சுசீலா கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொலை செய்தது தெரியவந்தது.

பகீர் வாக்குமூலம்

இதையடுத்து சுசீலாவை போலீசார் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியானது, அதில், சுசீலாவுக்கும் பல்லடம் பகுதியில் உள்ள பனியன் நிறுவனத்தில் மேலாளராக பணியாற்றி வந்த மாரீஸ்வரன் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். இதையறிந்த கோபால் மனைவி மற்றும் மாரீஸ்வரனை எச்சரித்துள்ளார். கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்ததால் கோபாலை கொலை செய்ய சுசீலாவும், மாரீஸ்வரனும் திட்டமிட்டுள்ளனர்.

கைது

அதன்படி மாரீஸ்வரன் அவர் வேலை பார்த்து வந்த நிறுவனத்தில் பணியாற்றி வந்த மதன்குமார், மணிகண்டன் மற்றும் கூலிப்படையினர் வினோத், லோகேஸ்வரன், விஜய் ஆகியோருடன் கோபாலை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். சம்பவத்தன்று கோபால்   இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அவரை வழிமறித்து கத்தியால் குத்தி விட்டு தப்பி சென்றது விசாரணையில் தெரியவந்தது. பின்னர் குளித்தலை மற்றும் அருள்புரம் பகுதியில் பதுங்கியிருந்த 6 பேரையும் போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர். 

இதையும் படிங்க;- நண்பனின் கள்ளக் காதலிக்கு பிராக்கிட்.. தனிமையில் அடிக்கடி உல்லாசம்.. கும்மிருட்டில் குளத்து கரையில் பயங்கரம்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!