தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தூத்துக்குடியை சேர்ந்த ஜான்சன் (58) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
ஓட்டப்பிடாரம் அருகே 4ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தலைமை ஆசிரியர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே கோவிந்தாபுரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 100க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். இந்த பள்ளியில் தூத்துக்குடியை சேர்ந்த ஜான்சன் (58) என்பவர் தலைமை ஆசிரியராக பணியாற்றி வருகிறார்.
இதையும் படிங்க: சென்னையில் பயங்கரம்.. பிரபல ரவுடி ஓட ஓட விரட்டி படுகொலை.. அலறிய பொதுமக்கள்..!
இந்நிலையில் தலைமை ஆசிரியர் ஜான்சன் அப்பள்ளியில் படிக்கும் இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது மட்டுமல்லாமல் செல்போனில் ஆபாச படங்களை காண்பித்து பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமிகள் இதுகுறித்து தங்களிடம் பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: பெண் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் அங்குலம் அங்குலமாக ரசித்த ஹவுஸ் ஓனர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் கடம்பூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தலைமை ஆசிரியர் ஜான்சன் மீதான குற்றச்சாட்டு உறுதியானது. இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து அவரை கைது செய்ததை அடுத்து தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.