ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரக் கட்டைகள் அதிகளவில் விளைகின்றன. இந்த செம்மரங்களை வெட்டிக் கடத்தும் சம்பவங்கள் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
ஆந்திராவில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த செம்மர கடத்தல் தடுப்பு பிரிவு காவலரை கார் ஏற்றி கொலை சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஆந்திர மாநிலம் திருப்பதி அருகே உள்ள சேஷாசலம் வனப்பகுதியில் விலை உயர்ந்த செம்மரக் கட்டைகள் அதிகளவில் விளைகின்றன. இந்த செம்மரங்களை வெட்டிக் கடத்தும் சம்பவங்கள் கடந்த 30 ஆண்டுகளாக தொடர்ந்து அரங்கேறி வருகிறது. இதுதொடர்பாக கைது நடவடிக்கைகளும் அவ்வப்போது நடந்து வருகின்றன.
இதையும் படிங்க: செம்பரம்பாக்கம் ஏரியில் தலை இல்லாமல் 6 துண்டுகலாக மிதந்த உடல்கள்! கொலை செய்யப்பட்டது யார்? வெளியான பகீர் தகவல்
இந்த செம்மரக் கடத்தலை தடுக்கும் வகையில் போலீசாரும், அதிரடிப் படையினரும் தீவிர ரோந்து சென்று வருகின்றனர். இந்நிலையில் செம்மரக் கடத்தல் தடுப்பு அதிரடிப்படை போலீசார் வழக்கம் போல் நேற்று இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இதையும் படிங்க: பெண் குளிப்பதை ரகசிய கேமரா மூலம் அங்குலம் அங்குலமாக ரசித்த ஹவுஸ் ஓனர்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
அப்போது அன்னமய்யா மாவட்டம் குண்ட்ராவாரி பள்ளி அருகே சோதனை சாவடி வனப்பகுதியில் இருந்து வேகமாக வந்த காரை தடுத்து நிறுத்த முற்பட்டனர். ஆனால் அந்த கார் நிற்காமல் போலீசார் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்த கணேஷ்(30) சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். இதனையடுத்து வனப்பகுதியில் தப்பித்து ஓடிய 5 பேரில் 2 பேரை போலீசார் பிடித்தனர். 3 பேர் தப்பி ஓடினர். பிடிபட்ட காரில் இருந்து 7 செம்மரக் கட்டைகளை பறிமுதல் செய்தனர்.