லீவுக்கு சென்ற பள்ளி மாணவியை சொந்த அத்தையே பாலியல் தொழிலில் தள்ளிய கொடுமை.. அதிர்ச்சி சம்பவம்..

By Ramya s  |  First Published Feb 5, 2024, 10:50 AM IST

சென்னையில் பள்ளி மாணவியை பாலியல் தொழிலில் தள்ளிய உறவுக்கார பெண் உட்பட 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.


சென்னையில் பள்ளி மாணவியை சொந்த அத்தையே பாலியல் தொழிலில் தள்ளிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  சென்னை ஓ.எம்.ஆர் சாலை பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் ஒருவரின் மகள் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த மே மாதம் பள்ளி விடுமுறைக்காக தனது தங்கை வீட்டிற்கு அந்த மாணவியை தந்தை அனுப்பி வைத்துள்ளார். ஆனால் அங்கு சென்ற மாணவியை அவரின் சொந்த அத்தையே மிரட்டி கட்டாய்ப்படுத்தி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தி உள்ளார்.

முதல் கட்டமாக ரூ. 10,000 பெற்றுக்கொண்டு சென்னை கோயம்பேடு அழைத்து சென்று அங்கிருந்து வேளச்சேரிக்கு இளைஞர் ஒருவருடன் ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார். அந்த இளைஞர் அந்த மாணவியை தனது வீட்டில் 5 நாட்கள் வைத்திருந்து அனுப்பி உள்ளார்.

Tap to resize

Latest Videos

undefined

இதை தொடர்ந்து வாரம் ஒரு முறை வெவ்வேறு நபர்களிடம் பணம் பெற்றுக்கொண்டு மாணவியை அவர்களிடம் அனுப்பி உள்ளார். இதனால் கடும் மன உளைச்சலுக்கு ஆளான அந்த மாணவி பெற்றோரிடம் செல்ல வேண்டும் என்று அடம்பிடித்துள்ளார். 

சாக்லேட் கொடுத்து பள்ளி சிறுமிகளை சீரழித்த காமக்கொடூரன்.. தற்போதைய நிலைமையை பார்த்தீங்களா?

இதனை தொடர்ந்து வேறு வழியின்றி மாணவியை அவரின் வீட்டுக்கு அத்தை அனுப்பி வைத்துள்ளார். இந்த சூழலில் மாணவிக்கு உடல்நிலைக்குறைவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு தொடர் வாந்தி, மயக்கம் இருந்துள்ளது. இதனால் பதறிப்போன தந்தை மாணவியை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். அப்போது அந்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் கர்ப்பமாக இருப்பதாக கூறியுள்ளனர். 

இதை கேட்டு அதிர்ச்சியடைந்த தந்தை மாணவியிடம் இதுகுறித்து விவரம் கேட்டுள்ள்ளார். அப்போது மாணவி அத்தையின் செயல்கள் குறித்து தனது தந்தையிடம் கூறியுள்ளார். உடனடியாக கோயம்பேடு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததை தொடர்ந்து காவல்துறையினர் போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் மாணவியின் அத்தையான அந்த பெண்ணையும் அவருக்கு துணையாக இருந்த 2 பெண்களும் கைது செய்யப்பட்டனர். 

மகளை தனது தங்கையே பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதை அறிந்த உடன் அவரின் வீட்டிற்கு சென்று சரமாரியாக தாக்கி கத்திய தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் காயமடைந்த அத்தை காவல்துறையில் புகார் அளித்துள்ளார். ஆனால் மாணவியை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய அத்தை மீது தந்தை அளித்த புகாரை காவல்துறை விசாரிக்காமல், தந்தையையே கைது செய்து சிறையில் அடைத்தனர். 

சமைக்க எவ்வளவு நேரம்? ஆத்திரத்தில் தாயை கம்பியால் அடித்து கொன்ற 17 வயது மகன்!இறுதியில் என்ன செய்தார் தெரியுமா?

ஆனால் அன்றைய தினம் போலீசார் விசாரித்து இருந்தால் சிறுமியின் அத்தை அப்போதே கைது செய்யப்பட்டிருப்பார் என்று மாணவி தரப்பினர் தெரிவித்துள்ளனர். தற்போது பாதிக்கப்பட்ட மாணவி குழந்தைகள் நல காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார். அவரின் தந்தை சிறையில் இருந்து வெளியே வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

click me!