10 வருடங்களாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு… பள்ளி ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை!!

Published : Jul 19, 2022, 07:42 PM IST
10 வருடங்களாக மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு… பள்ளி ஆசிரியர் மீது அதிரடி நடவடிக்கை!!

சுருக்கம்

சிவகங்கை அருகே காதுகேளாதோருக்கான உயர்நிலைப்பள்ளியில் படிக்கு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். 

சிவகங்கை அருகே காதுகேளாதோருக்கான உயர்நிலைப்பள்ளியில் படிக்கு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு அளித்ததாக அப்பள்ளி ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளார். சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் அரசு உதவி பெறும் சி.எஸ்.ஐ செவித்திறன் குறைவுடையோருக்கான உயர்நிலைப்பள்ளி பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு மானாமதுரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சுமார் 150க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். என்பவர் தமிழாசிரியராக பணியாற்றி வருவார். இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகளுக்கு ஆப்ரஹாம் கடந்த 10 வருடங்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: அடிக்கடி தனிமையில் விட்டு வெளியூர் போன கணவன்... இளைஞனை வீட்டுக்கே வரவழைத்து மனைவி உல்லாசம்.

இந்த நிலையில் கடந்த மே 9 ஆம் தேதி பத்தாம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளதாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பாக காது மற்றும் வாய் பேசாத சங்கத்தினர் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். ஆனால் விசாரணை விரைவாக நடக்கவில்லை என்று கூறி வாய் மற்றும் காது கேளாத சங்கத்தை சேர்ந்தவர்கள் நேற்று பள்ளியின் வளாகத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதையும் படிங்க: பக்கத்து வீட்டில் வசித்து வந்த பெண்ணுடன் 'லிவிங் டு கெதர்' . இஸ்டத்துக்கு உல்லாசம்.. கழுத்தை நெறித்து கொலை.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அதிகாரிகள் வட்டாட்சியர் மற்றும் குழந்தைகள் நல அதிகாரிகள் இது குறித்து விசாரணை செய்து வந்தனர். விசாரணையின் போது முன்னாள் மாணவிகள் ஐந்து பேர் இந்த ஆசிரியர் பாலியல் தொந்தரவு செய்ததாக புகார் அளித்துள்ளனர். இதை அடுத்து குற்றச்சாட்டப்பட்ட தமிழ் ஆசிரியர் ஆல்பர்ட் ஆபிரஹாம் மீது  காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதை அடுத்து ஆல்பர்ட் ஆப்ரஹாம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

முதலிரவில் அதிர்ச்சி.. திருமணமான 3 நாளில் விவாகரத்து கேட்ட புதுப்பெண்! நடந்தது என்ன?
ஆண்ட்டியின் அழகில் மயங்கிய கொரியர் ஊழியர்.. ரவுடியின் மனைவிக்கு விடாமல் காதல் மெசேஜ்.. இறுதியில் நடந்த அதிர்ச்சி