அடச்சி.. ஸ்கூல்ல ஒரு வாத்தியார் செய்ற வேலையா இது.. கதறிய பள்ளி மாணவி..!

Published : Jun 24, 2022, 03:14 PM IST
அடச்சி.. ஸ்கூல்ல ஒரு வாத்தியார் செய்ற வேலையா இது.. கதறிய பள்ளி மாணவி..!

சுருக்கம்

தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை கை, கால்களை அமுக்கச் சொல்லி அவர்களிடமும் ஆசிரியர் அத்துமீறி நடந்து வருகிறார். தன்னைப் பார்க்கப் பள்ளிக்கு வந்த உறவுக்கார சிறுமியிடமும் தவறான முறையில் நடந்து கொண்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். 

ஆத்தூர் அருகே அரசு தொடக்கப் பள்ளியில் படிக்கும் 5ம் வகுப்பு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆசிரியர் மீது  சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டம், சித்தன்பட்டி குட்டை கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் 50-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். கோடை விடுமுறை முடிந்த நிலையில் கடந்த 20-ம் தேதி பள்ளி திறக்கப்பட்டது. இந்நிலையில் 22-ம் தேதி மாலை பள்ளி முடிந்து வீட்டுக்குச் சென்ற 5-ம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுமி நான் இனி பள்ளிக்குச் செல்லமாட்டேன் என பெற்றோரிடம் அழுதுள்ளார். இது குறித்துப் பெற்றோர் மகளிடம் விசாரித்தபோது அகஸ்டின் தங்கையா என்கிற பள்ளி ஆசிரியர் தனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வருவதாக கூறியுள்ளார்.

மேலும், தன்னுடன் படிக்கும் சக மாணவர்களை கை, கால்களை அமுக்கச் சொல்லி அவர்களிடமும் ஆசிரியர் அத்துமீறி நடந்து வருகிறார். தன்னைப் பார்க்கப் பள்ளிக்கு வந்த உறவுக்கார சிறுமியிடமும் தவறான முறையில் நடந்து கொண்டதாகவும் சிறுமி தெரிவித்துள்ளார். இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லக்கூடாது மிரட்டியதாக கூறியுள்ளார். சிறுமி கூறிய தகவலைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் ஊர் மக்களுடன் சென்று பள்ளிக்கு வந்த ஆசிரியர் அகஸ்டின் தங்கையாவிடம் விசாரித்து தாக்கியுள்ளனர். இதனால், காயமடைந்த அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க;- கள்ளக்காதலியுடன் உல்லாச வாழ்க்கை.. இரட்டை கொலை வழக்கில் காட்டிக்கொடுத்த மங்கி குல்லா.. வெளியான பகீர் தகவல்.!

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!