ஏழைகளின் கழுத்தை நெரிக்கும் காட்டன் சூதாட்டம்.. கல்லா கட்டும் கும்பல்.. வேடிக்கை பார்க்கும் போலீஸ்..!

By vinoth kumarFirst Published Jun 24, 2022, 2:17 PM IST
Highlights

10 ரூபாய் செலுத்தினால் 1000 ரூபாய் கிடைக்கும் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டுகிறது என்ற ஆசைவார்த்தை கூறி வியர்வை சிந்தி உழைக்கும் மக்களை சுரண்டுகிறது இந்த கும்பல். குறிப்பாக பெட்டிக்கடை மற்றும் சிறு வீடுகளை வாடகைக்கு எடுத்து இந்த காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது. 

வேலூரில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் கொடிகட்டிப் பறந்து வருகிறது. இதனை போலீசார் வேடிக்கை பார்த்து வருகின்றனர். 

வேலூர் மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டு விற்பனை காட்டன் சூதாட்டம் என்ற பெயரில் அமோகமாக நடைபெற்று வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக விரிஞ்சிபுரம் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பஜார் பகுதியில் வீடுகளை வாடகைக்கு எடுத்து காட்டான் சூதாட்டத்தை நடத்தி வருகின்றனர். தினமும் கூலி வேலைக்கு செல்பவர்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், காய்கறி, பூ, பழம் விற்கும் சிறு வியாபாரிகள், கட்டிட வேலை செய்பவர்கள் என இவர்களை குறிவைத்தே காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது. 

இதையும் படிங்க;- கொஞ்ச நேரம் என்னோட அட்ஜஸ்ட் பண்ணு.. உன்னோட வேலைய பர்மனென்ட் ஆக்குறேன்.. பெண் ஊழியரிடம் அத்துமீறிய டாக்டர்

10 ரூபாய் செலுத்தினால் 1000 ரூபாய் கிடைக்கும் அதிஷ்டம் வீட்டு கதவை தட்டுகிறது என்ற ஆசைவார்த்தை கூறி வியர்வை சிந்தி உழைக்கும் மக்களை சுரண்டுகிறது இந்த கும்பல். குறிப்பாக பெட்டிக்கடை மற்றும் சிறு வீடுகளை வாடகைக்கு எடுத்து இந்த காட்டன் சூதாட்டம் நடத்தப்படுகிறது. சிலர் வீடுகளுக்குள் அலுவலகம் அமைத்து சூதாட்டத்தை நடத்துகின்றனர். வேலூர் மாவட்டத்தில் 3ம் நம்பர் காட்டன் தான் மாஸ் காட்டுகிறது. நம்பர் எழுதிய சின்ன சின்ன டோக்கன்களை பணம் கொடுத்து வாங்க வேண்டும். பிறகு ஒரு மணிநேரத்திற்கு ஒருமுறை அறிவிக்கப்படும் முடிகள் இதற்கென வடிவமைக்கப்பட்ட பிரத்யேக மொபைல்ஆப் மற்றும் வாட்ஸ் ஆப் மூலம் வெளியிடப்படுகிறது. 

வெற்றி பெறுபவர்களுக்கு குறைவான பணமே கொடுக்கப்படுகிறது. ஆனால், ஒரு மணிநேரத்திற்கு 15 லட்சம் ரூபாய் முதல் 20 லட்சம் ரூபாய் வரை பெரும் முதலாளிகள் இந்த சூதாட்டத்தின் மூலம் பெருவதாக கூறப்படுகிறது. மிட்டர் வட்டிக்கு கடன் வாங்கி காட்டன் சூதாட்டத்தில் விளையாடிய பல பேர் வீடு, பொரட்களை இழந்து நடுத்தெருவில் நிற்கிறார்கள். கடனாளியான சிலர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். மாவட்டம் முழுவதும் நூற்றுக்கணக்கான ஏஜெண்டுகள் இருப்பதாகவும், இதில், பல கோடி ரூபாய் புரளுவதாகவும் கூறப்படுகிறது.  தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில் காட்டான் ஜாக்பாட் என்ற பெயரில் நடதத்தி வரும் சூதாட்டத்தை காவல்துறையினரும் கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.  

இதையும் படிங்க;- திருமணமான பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு.. டார்ச்சர் தாங்க முடியாமல் தற்கொலை.. சிறுவன் உள்பட 3 பேர் கைது..!

click me!