
காதலியை கொன்று உடலை புதைத்துவிட்டு கள்ளக்காதலன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
கர்நாடக மாநிலம் மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா எம்.கெப்பேகுந்தி கிராமத்தைச் சேர்ந்தவர் சித்தராஜு. அதே கிராமத்தைச் சேர்ந்தவர் சுமித்ரா. இவர்கள் இருவருக்கும் திருமணமாகி விட்டது. இந்நிலையில், சித்தராஜுவுக்கும், சுமித்ராவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.
இதையும் படிங்க;- கடைக்குள்ளே ரகசிய ரூம்.. உல்லாசம்.. ஸ்ரீ கணபதி சில்க்ஸ் உரிமையாளருக்கு எதிராக கடைக்குள்ளே பெண் செய்த காரியம்.!
இவர்களது கள்ளக்காதல் விவகாரம் நாளடைவில் இருவீட்டாருக்கும் தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் அவர்களது குடும்பத்தினர் கண்டித்தனர். மேலும் கள்ளக்காதலை கைவிட்டு விடும்படி எச்சரித்தனர். ஆனால், இதை இருவரும் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தங்களது கள்ளக்காதலை தொடர்ந்து வந்தனர். இந்நிலையில், சித்தராஜு, தனது கள்ளக்காதலி சுமித்ராவுடன் சேர்ந்து கோவிலுக்கு சென்றுள்ளனர்.
இதையும் படிங்க;- இரவில் ஓயாத டார்ச்சர்.. கொதிக்கும் ரசத்தை கணவர் முகத்தில் ஊற்றிய மனைவி.. வெந்த முகத்துடன் கணவர் செய்த காரியம்
பின்னர், இருவரும், காவிரி ஆற்றங்கரையில் அமர்ந்து பேசிக் கொண்டிருந்தனர். அப்போது, சுமித்ராவை திடீரென சித்தராஜு சரமாரியாக அடித்து, உதைத்தும், கழுத்தை நெரித்தும் படுகொலை செய்தார். பின்னர் அவரது உடலை ஆற்றங்கரையோரம் உள்ள வனப்பகுதியில் குழிதோண்டி புதைத்துவிட்டு, தானும் அங்குள்ள ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.