பாஜக நிர்வாகி நடிகை மதுவந்தி மீது பரபரப்பு புகார்..!பணத்தை திருப்பி கேட்டதால் அடியாட்களை வைத்து தாக்குகிறார்

Published : Jun 24, 2022, 08:54 AM ISTUpdated : Jun 24, 2022, 08:58 AM IST
பாஜக நிர்வாகி நடிகை மதுவந்தி மீது பரபரப்பு புகார்..!பணத்தை திருப்பி கேட்டதால் அடியாட்களை வைத்து தாக்குகிறார்

சுருக்கம்

தனியார் பள்ளி ஒன்றில் சீட் வாங்கி தருவதாக கூறி பணம் பெற்று மதுவந்தி ஏமாற்றிய நிலையில், பணத்தை திருப்பி கேட்டதால் அடியாட்களை வைத்து தாக்குவதாக பாதிக்கப்பட்டவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

பள்ளியில் சீட் வாங்கி தருவதாக மோசடி

நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் மகளும், பாரதிய ஜனதா கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினருமான மதுவந்தி, தீவிர பாஜக ஆதரவாளர் ஆவார்,  பாஜகவுக்கு ஆதரவாக சமூகவலைதளங்களில் பேசியும் குரல் கொடுத்தும் வருகிறார். பணமதிப்பிழப்பு விவகாரத்தில் மதுவந்தி பேசிய வீடியோ சமூகவலைதளத்தில் வைரலானது.   "பிராமணர்களாக பிறத்தவர்கள் அறிவாளிகளாக இருப்பார்கள்"  என பேசியது பின்னர் பத்மா சேஷாத்திரி பள்ளியில் நடந்த பாலியல்  விவகாரத்தில் ஆசிரியருக்கு சாதகமாக பேசியது போன்றவை கடுமை விமர்சனத்துக்கு உள்ளானது. இதே போல சென்னையில் உள்ள இந்துஜா லைலேண்ட் ஃபைனான்ஸ் என்ற நிதி நிறுவனத்தில் தனது வீட்டின் பேரில் 2016 ஆம் ஆண்டு ஒரு கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளார். அந்த வீட்டிற்கு வட்டியிடன் சேர்த்து ஒரு கோடியே 21 லட்சத்து 30 ஆயிரத்து 867 ரூபாயை மதுவந்தி கட்டத் தவறியதாகக் கூறப்படுகிறது. இதன் காரணமாக ஆழ்வார்பேட்டையில் உள்ள மதுவந்தினி வீட்டிற்கு வங்கி அதிகாரிகள் சீல் வைத்தனர். அப்போது  வங்கி அதிகாரிகளிடம் மதுவந்தி கெஞ்சுவது போன்ற வீடியோ வெளியாகி பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் தற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மதுவந்தி மீது புதிய புகார் ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. 

மதுவந்தி மீது ஆணையரிடம் புகார்

சென்னை மேற்கு மாம்பலத்தில் சேர்ந்த கிருஷ்ண பிரசாத் என்பவர் வேப்பேரியில் உள்ள காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்,  அந்த புகாரில் பாஜக நிர்வாகியும் நடிகருமான ஒய்ஜி மகேந்திரனின் மகள் மதுவந்தி நிர்வகித்துவரும் பள்ளியில் சீட் வாங்கித் தருவதாக கூறி தன் மூலமாக 19 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பெற்றதாகவும்,ஆனால் கூறிய படி சீட் வாங்கி தராத காரணத்தால்  அந்த பணத்தை திருப்பிக் கேட்டபோது தனது அடியாட்களை வைத்து தன்னை மிரட்டியதாகவும் புகார் அளித்துள்ளார்.

பணம் தராமல் மோசடி

சென்னை பாண்டிபஜார் காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதாகவும் அந்த புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதாக கிருஷ்ண பிரசாத் கூறினார். இந்த புகார் தொடர்பாக கிருஷ்ண பிரசாத்தின் அவரது வழக்கறிஞர் செல்வகுமார் கூறுகையில், பள்ளியில் சீட் ஆங்கி தருவதாக  19 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் பெற்றோர்களிடம் இருந்து மதுவந்தி பெற்றதாகவும், இதில் 13 லட்சத்து 85 ஆயிரம் ரூபாயை திருப்பிக் கொடுத்ததாகவும் மீதமுள்ள 6 லட்சம் பணத்தை திருப்பி கொடுக்காமல் ஏமாற்றி வருவதாக தெரிவித்துள்ளார். எனவே பணத்தை திருப்பி கொடுத்த  நடவடிக்கை எடுக்குமாறு காவல் ஆணையரிடம் புகார் அளித்ததாக தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

கள்ளக்காதலியுடன் உல்லாச வாழ்க்கை.. இரட்டை கொலை வழக்கில் காட்டுக்கொடுத்த மங்கி குல்லா.. வெளியான பகீர் தகவல்.!

 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!