கஞ்சாவிற்கு அடிமையான 16 வயது சிறுமி..நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் வேலையை பார்த்தீங்களா..சென்னையில் அதிர்ச்சி

Published : Jun 24, 2022, 10:49 AM IST
கஞ்சாவிற்கு அடிமையான 16 வயது சிறுமி..நண்பர்களுடன் சேர்ந்து செய்யும் வேலையை பார்த்தீங்களா..சென்னையில் அதிர்ச்சி

சுருக்கம்

சென்னை ராயப்பேட்டை கோபாலபுரம் பகுதியில் தனியாக நடந்து செல்வோரிடம் செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவதாக காவல் நிலையங்களில் தொடர் புகார்கள் வந்தன.

கஞ்சா போதைக்கு அடிமையான 16 வயது சிறுமி தனது இன்ஸ்டா நண்பர்களுடன் சேர்ந்து வழிப்பறியில் ஈடுபட்டு வந்த சம்பவம் பெரும் சென்னையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

சென்னை ராயப்பேட்டை கோபாலபுரம் பகுதியில் தனியாக நடந்து செல்வோரிடம் செல்போன் பறிப்பு சம்பவம் தொடர்ந்து அரங்கேறி வருவதாக காவல் நிலையங்களில் தொடர் புகார்கள் வந்தன. இதேபோன்று மயிலாப்பூர், ஆயிரம் விளக்கு என 16 இடங்களில் வழிப்பறி சம்பவமும் நடந்தது. இதுதொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு செல்போன் பறிப்புகள் நடைபெற்ற இடங்களிலெல்லாம் வைக்கப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை மொத்தமாக எடுத்து அதனை ஆய்வு செய்தனர். மொத்தமாக 42 சிசிடிவி காட்சிகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.  

இதனையடுத்து, திருவல்லிக்கேணியில் உள்ள லாட்ஜில் பதுங்கியிருந்த 4 பேரை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில்,  சென்னையை சேர்ந்த ஜெகன், சிதம்பரம் ஜெகதீசன், தூத்துக்குடி சண்முகபுரத்தைச் சேர்ந்த சரவணன் ஆகியோரை சென்னைக்கு வரவழைத்து செல்போன் பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர்களுடன் இருந்த 17 வயது சிறுமி ஒருவரும் சிக்கினார். தனியாக பெண் ஒருவர் செல்கிறார் வந்தால் செல்போன் பறிக்கலாம் இன்ஸ்டாகிராம் நண்பர்களுக்கு சிறுமி தகவல் கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. 

வழிப்பறி செய்யப்பட்ட செல்போன்களை வைத்து அதில்வரும் பணத்தை கொண்டு கஞ்சா புகைத்து வந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த கும்பலிடம் இருந்து மொத்தம் 166 செல்போன்கள், ஒரு ஆப்பிள் ஐ பேட், 2 இருசக்கர வாகனங்கள் உள்ளிட்டவற்றைப் பறிமுதல் செய்த போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

PREV
click me!

Recommended Stories

இரவு பகல் பாராமல் எந்நேரமும் ஓயாமல் டார்ச்சர்! அதிமுக பிரமுகரின் மகளை இதற்காக தான் கொன்றேன்!
இரண்டு குழந்தைகளின் தாய் செய்ற வேலையா இது.. பழைய காதலனுக்காக புருஷனை போட்டு தள்ளிய மனைவி