அம்மா செய்யிற வேலையா இது.. கருமம் கருமம்.. தாயின் உதவியுடன் மகளை பலாத்காரம் செய்த கள்ளக்காதலன்.!

Published : Aug 29, 2021, 07:34 PM IST
அம்மா செய்யிற வேலையா இது.. கருமம் கருமம்.. தாயின் உதவியுடன் மகளை பலாத்காரம் செய்த கள்ளக்காதலன்.!

சுருக்கம்

 2 நாட்களுக்கு முன்னர் சிறுமிக்கு திடீரென  உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிவக்குமார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாய் செல்வியிடம் கூறியபோது, வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.

தாயின் உதவியுடன் கள்ளக்காதலன் மகளை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் போக்சோவில் கைது செய்துள்ளனர். 

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வடமதுரை ஈ.பி.காலனி  சத்யா நகரைச் சேர்ந்தவர் சிவக்குமார்(35). இவர் வேடசந்தூர் அருகே உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை பார்த்து வந்தார். அதே தொழிற்சாலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த செல்வி(45) என்பவரும் வேலை பார்த்து வந்துள்ளார். அப்போது, இருவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.  இந்த பழக்கம் நாளடைவில் இருவருக்கும் இடையே கள்ளக்காதலாக மாறியுள்ளது. 

இந்நிலையில், செல்வி தனது கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து  மகள்களுடன் வாழ்ந்து வந்ததால்  சிவக்குமார் அடிக்கடி திண்டுக்கல்லில் உள்ள செல்வி வீட்டிற்கு சென்று வந்துள்ளார். செல்விக்கு 2 மகள்கள் உள்ளனர். 2-வது மகள் திண்டுக்கல்லில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 10-ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்னர் சிறுமிக்கு திடீரென  உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, சிவக்குமார் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி தனது வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாய் செல்வியிடம் கூறியபோது, வெளியே யாரிடமும் சொல்லக் கூடாது என்று மிரட்டியுள்ளார்.

 இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது உறவினர்களிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதனையடுத்து, சிறுமியின் உறவினர்கள் வடமதுரை அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். இதனையடுத்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சிவக்குமார், செல்வி ஆகிய இருவரையும் போக்சோவில் கைது செய்து சிறையில் அடைத்தனர். 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!