இவள் தாயா இல்லை பேயா.. பெற்ற குழந்தையின் காலை முறுக்கி காலணியால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி..!

Published : Aug 29, 2021, 04:45 PM IST
இவள் தாயா இல்லை பேயா.. பெற்ற குழந்தையின் காலை முறுக்கி காலணியால் கொடூரமாக தாக்கும் வீடியோ காட்சி..!

சுருக்கம்

குழந்தையை, துளசி காலணியாலும், கைகளாலும் கடுமையாக தாக்கியும், குழந்தையின் காலை முறுக்கும் காட்சிகளும் இடம்பெற்று பார்ப்போரை அதிர வைக்கும் அளவுக்கு இருந்துள்ளது. இந்நிலையில், பெற்ற குழந்தையின்மீது கொடூரத் தாக்குதலை நடத்திய தாய் ராணி, ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது குழந்தைகள்  தந்தை வடிவழகன் வளர்ப்பில் வளர்த்து வருகின்றனர்.

செஞ்சி அருகே பெற்ற குழந்தையை கண்மூடித்தனமாக தாயே கொடூரமாக தாக்கும் வீடியோ வைரலான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

விழுப்புரம் மாவட்டம், செஞ்சி அருகே மணலப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் வடிவழகன் (26). கூலி தொழிலாளியான இவர், ஆந்திர மாநிலம், சித்தூர் தாலுகா, ராம்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த துளசி (23) என்பவரை கடந்த 2016-ம் ஆண்டு திருமணம் செய்துகொண்டார். இந்த தம்பதியினருக்கு கோகுல்(4) மற்றும்  பிரதீப்(2) இரண்டு மகன்கள் உள்ளனர். இந்நிலையில், கணவன் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்படுவது வழக்கமான ஒன்றாக இருந்து வந்துள்ளது. 

இந்நிலையில், கடந்த பிப்ரவரி 23ம் தேதி  வீட்டில் கணவன் இல்லாத நேரம் பார்த்து துளசி தனது இளைய மகன் பிரதீப்பை கடுமையாகத் தாக்கியதை வீடியோ பதிவுசெய்து வைத்துள்ளார். இதில், படுகாயமடைந்த குழந்தையை அவரே புதுச்சேரி, ஜிப்மர் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார். இதற்கிடையே, கடந்த 40 நாட்களுக்கு முன் துளசியின் செல்போனில் வடிவழகன் பார்த்தபோது, அதில் குழந்தையை துளசி தாக்கும் நான்கு வீடியோக்களை கண்டு அதிர்ச்சியடைந்தார். 

அதில், குழந்தையை, துளசி காலணியாலும், கைகளாலும் கடுமையாக தாக்கியும், குழந்தையின் காலை முறுக்கும் காட்சிகளும் இடம்பெற்று பார்ப்போரை அதிர வைக்கும் அளவுக்கு இருந்துள்ளது. இந்நிலையில், பெற்ற குழந்தையின்மீது கொடூரத் தாக்குதலை நடத்திய தாய் ராணி, ஆந்திர மாநிலத்தில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டதாகக் கூறப்படுகிறது. தற்போது குழந்தைகள்  தந்தை வடிவழகன் வளர்ப்பில் வளர்த்து வருகின்றனர்.

இதனிடையே, தாயே கொடூரமான தாக்குதலை நடத்தும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்து, சத்தியமங்கலம் போலீசார் வடிவழகன் கொடுத்த புகாரின் பேரில் 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் குழந்தையின் தாய் துளசியை கைது செய்ய தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளனர். 

PREV
click me!

Recommended Stories

அரைகுறை ஆடையுடன் அமர்ந்திருந்த ஸ்ரேயா! கதறியும் விடாத தந்தை, மகன்! இறுதியில் நடந்த அதிர்ச்சி!
திருமணமான பெண்ணுடன் பழகுவதை நிறுத்திடு! கண்டித்த வேல்குமார்! நடுரோட்டில் கதறவிட்ட அதிர்ச்சி!