ஐயோ இந்த கொடுமையை பாருங்கள்.. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம்..!

Published : Oct 23, 2020, 12:05 PM ISTUpdated : Oct 23, 2020, 12:45 PM IST
ஐயோ இந்த கொடுமையை பாருங்கள்.. மாணவனை கொன்று பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட கொடூரம்..!

சுருக்கம்

முன்விரோதம் காரணமாக சிறுவன் அடித்து கொலை செய்து விட்டு பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்விரோதம் காரணமாக சிறுவன் அடித்து கொலை செய்து விட்டு பிணத்துடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டதாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே நொச்சிக்குப்பம் மீனவர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் மகன் தேவன்ராஜ்(13). இவன் எட்டாம் வகுப்பு படித்துவிட்டு வீட்டில் இருந்து வந்தான். இந்நிலையில் கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்து வெளியில் சென்று உள்ளான். ஆனால் மீண்டும் வீட்டிற்கு வரவில்லை. இதனால் அதிர்ச்சியான பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதையடுத்து அவரது தந்தை கோவிந்தராஜ் மரக்காணம் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவனை தேடிவந்தனர். மேலும் தேவன்ராஜ் பயன்படுத்திய செல்போன் எண்ணை ஆய்வு செய்தபோது சிறுவன் மாயமான அன்று அதே கிராமத்தில் உள்ள கலைமணி மகன் அபினேஷ் என்பவன் கடைசியாக பேசியது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து போலீசார் நொச்சிக்குப்பம் மீனவர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த சிசி.டிவி கேமராவை ஆய்வு செய்தபோது தேவன்ராஜ் மாயமான சமயத்தில் அபினேஷ்வுடன் சென்ற காட்சிகள் பதிவாகி இருந்துள்ளது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அபினேஷை பிடித்துவந்து காவல் நிலையத்தில் வைத்து தீவிர விசாரனை நடத்தினர். விசாரணையில் தேவன்ராஜை அபினேஷ் அடித்துகொலை செய்ததை ஒப்புக்கொண்டான். 
பின்னர், தேவன்ராஜ் புதைக்கப்பட்ட இடத்தை அபினேஷ் அடையாளம் காட்டினார். இதையடுத்து தேவன்ராஜின் உடல் தோண்டி எடுக்கப்பட்டது. அழுகிய நிலையில் இருந்ததால் அந்த இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இதன்பின் அவனது உடல் பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

மாணவன் தேவன்ராஜை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து போலீசில் அபினேஷ் அளித்துள்ள வாக்குமூலத்தில் பல்வேறு திடுக்கிடும் தகவலை தெரிவித்தார்.  இதுகுறித்து போலீசார் கூறுகையில்;-  கொலையான மாணவனின் தந்தை கோவிந்தராஜ் குடும்பத்துக்கும், அதே பகுதியில் வசித்து வந்த அபினேஷ் குடும்பத்துக்கும் பல ஆண்டுகளாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஏற்பட்ட ஆத்திரத்தில் கோவிந்தராஜின் ஒரே மகனை தீர்த்துக் கட்ட முடிவு செய்தேன். 

பறவை பிடிக்கச் செல்லலாம் என்று கூறி நைசாக பேசி தேவன்ராஜை கடற்கரை சாலையில் உள்ள சவுக்குத்தோப்புக்கு அபினேஷ் அழைத்துச் சென்று சரமாரியாக அடித்து தாக்கியதில் தேவன்ராஜ் மயங்கி விழுந்தான். இதன்பின் அவனது சட்டையை கழற்றி அதை வைத்து கழுத்தை நெரித்துக் கொலை செய்துள்ளார்.அதோடு விட்டு விடாமல் ஈவு இரக்கமின்றி தேவன்ராஜ் பிணத்துடன் அபினேஷ் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். பின்னர் சவுக்குத்தோப்பு அருகே உள்ள சுடுகாட்டில் குழிதோண்டி மாணவனின் உடலை புதைத்துவிட்டு அபினேஷ் அங்கிருந்து சென்று விட்டார். அதன்பிறகு தன் மீது சந்தேகம் வராமல் இருக்க எதுவுமே தெரியாதது போல் தினமும் வேலைக்கு சென்று வந்துள்ளார். இதனையடுத்து, அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

28 வயது ஜிம் மாஸ்டர்.! 42 வயது யோகிதா! எந்நேரமும் ஓயாமல்! இறுதியில் நடந்த அதிர்ச்சி.. வெளியான பரபரப்பு தகவல்!
Sathankulam Case: இந்தியாவையே உலுக்கிய தீர்ப்பு! 9 போலீசாருக்கு மரண தண்டனை.. நடந்தது என்ன?