தூங்கிக்கொண்டிருந்த தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்ட மகன்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!

Published : Oct 22, 2020, 07:11 PM IST
தூங்கிக்கொண்டிருந்த தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்ட மகன்.. ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து உயிரிழப்பு..!

சுருக்கம்

தென்காசி அருகே தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்றுவிட்டு மகன் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். 

தென்காசி அருகே தாயின் தலையில் அம்மிக்கல்லை போட்டு கொன்றுவிட்டு மகன் தீக்குளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி  வருகின்றனர். 

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள கடங்கநேரி கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். இவரது மனைவி இசக்கியம்மாள் (48). இவர்களுக்கு மாரிச்செல்வம் (28), மணிரத்னம் (26) ஆகிய 2 மகன்கள் உள்ளனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சுப்பிரமணியன் தனது மனைவியை பிரிந்து சென்று விட்டார். இதனால் இசக்கியம்மாள் பீடிச்சுற்றியும், தோசை மாவு விற்றும் தனது குடும்பத்தை காப்பாற்றி வந்தார்.

இதில், மாரிச்செல்வம் திருப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்திலும், மணிரத்னம் ஊரில் கூலிவேலையும் செய்து வந்தனர். இதனால் வீட்டில் இசக்கியம்மாள், மணிரத்னம் ஆகியோர் மட்டுமே இருந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு நடந்த விபத்தில் மணிரத்னம் காயம் அடைந்து மனநலம் பாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இசக்கியம்மாள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு தூங்கிக் கொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு மணிரத்னம் வந்தார். அவர் திடீரென்று அம்மிக்கல்லை எடுத்து தாயின் தலைமையில் போட்டுள்ளார். இதில், தாய் தலை நசுங்கி ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர், பயந்துபோன அவர் சமையலறைக்கு சென்ற மண்எண்ணெயை எடுத்து தனது உடலில் ஊற்றி தீவைத்துக் கொண்டார். இதில் வலி தாங்க முடியாமல் சத்தம் போட்டார். அவரது அலறல் கேட்டு அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

PREV
click me!

Recommended Stories

பள்ளி, கல்லூரி மாணவிகளை ஒரே நேரத்தில் கரெக்ட் செய்த இளைஞர்! கை குழந்தைகளுடன் 2 பேரும் கதறல்! இறுதியில் நடந்த ட்விஸ்ட்!
இதற்காக தான் கார் டிரைவர் ஹரீஷை கூலிப்படை ஏவி கொன்றேன்! மஞ்சுளாவின் சினிமாவை மிஞ்சிய பரபரப்பு வாக்குமூலம்!