அந்த இடத்தில் கை வைத்து மாணவிகளுக்கு பாலியல் தொல்லை? பள்ளி தாளாளரை குண்டாசில் குண்டுகட்டாக தூக்கிய போலீஸ்.!

By vinoth kumar  |  First Published Mar 1, 2023, 12:17 PM IST

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தாளாளராக குதுப்புன் நஜிப்(47) என்பவர் இருந்து வருகிறார். இவர் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு கண்ட இடத்தில் தொட்டு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார்.


பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் கைது செய்யப்பட்ட பள்ளி தாளாளர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டார். 

நெல்லை மாவட்டம் மேலப்பாளையத்தில் அரசு உதவி பெறும் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியின் தாளாளராக குதுப்புன் நஜிப்(47) என்பவர் இருந்து வருகிறார். இவர் 12ம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவிகளுக்கு கண்ட இடத்தில் தொட்டு அடிக்கடி பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். இதுதொடர்பாக மாணவிகள் புகார் அளித்துதும் பள்ளி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க;- எவ்வளவு அறிவுரை சொல்லியும் அடங்காமல் கள்ளக்காதலனுடன் உல்லாசம்.. கதறிய கணவர்.. கைவிட மறுத்த மனைவி.!

இதுகுறித்து பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திய பிறகு குதுப்புன் நஜிப் கைது செய்யப்பட்டார். இதுதொடர்பாக மாணவிகள் புகார் அளித்தும் சம்பவத்தை மூடி மறைக்க முயன்ற குற்றத்திற்காக பள்ளி தலைமை ஆசிரியை காதரம்மாள், தாளாளரின்  மனைவி முகமது பாத்திமா ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். 

இதையும் படிங்க;-  தலைக்கேறிய காமம்.. தூங்கி கொண்டிருந்த 80 வயது கிழவியை வாயை பொத்தி பலாத்காரம் செய்ய முயன்ற நபர்..!

குதுப்புன் நஜீப் பாலியல் வழக்கில் சிக்கியதால் அவர் தாளாளர் பொறுப்பில் இருந்தும் நீக்கப்பட்டார். இந்நிலையில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த குதுப்புன் நஜீப்பை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க நெல்லை கிழக்கு துணை போலீஸ் கமிஷனர்  பரிந்துரையை ஏற்று பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர். 

click me!