பெங்களூருவில் பெற்றோர் பேச்சைக் கேட்டு திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியை இளைஞர் ஒருவர் சரமாரியாகக் கத்தியால் குத்திக் கொன்றிருக்கிறார்.
பெங்களூருவில் இளைஞர் ஒருவர் தன்னை திருமணம் செய்துகொள்ள மறுத்த காதலியை பலமுறை கத்தியால் குத்திக் கொலை செய்திருக்கிறார்.
கொல்லப்பட்ட 25 வயது இளம் பெண் லீலா பவித்ரா நலமதி ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடவைச் சேர்ந்தவர். பணி நிமித்தமாக பெங்களூருவுக்கு வந்த அவர், முருகேஷ்பாளையா பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். லீலாவைக் கொன்ற தினகர் பனாலாவும் ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர். 28 வயதாகும் இவரும் பெங்களூரில் உள்ள டொம்லூரில் தனியார் நிறுவனத்தில் வேலை பார்ப்பவர்.
சிட்னியில் தமிழக இளைஞர் சுட்டுக்கொலை; ரயில் நிலைய ஊழியரைத் தாக்கியதாக குற்றச்சாட்டு
தினகரும் லீலாவும் ஐந்து ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். ஆனால், மணமகன் வேறு ஜாதியை சேர்ந்தவர் என்பதால், பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்துக்கு சம்மதம் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது.
அப்போது லீலா தினகரிடம் திருமணத்திற்கு தனது குடும்பத்தினர் சம்மதிக்க மாட்டார்கள் என்றும், குடும்பத்தின் முடிவுக்கு தான் கட்டுப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இதனால் காதலி திருமணத்துக்கு மறுத்ததால் ஆத்திரத்தில் இருந்த தினகர், செவ்வாய்க்கிழமை லீலா பணிபுரியும் அலுவலகத்திற்கு வந்து வாசலில் காத்துக்கொண்டு இருந்திருக்கிறார். இரவு 7.30 மணியளவில் லீலா வேலை முடிந்து வெளியே வந்தவுடன் அவருடன் வாக்குவாதம் செய்துள்ளார்.
அப்போது கோபம் தலைக்கு ஏறிய தினகர், திடீரென தன்னிடம் இருந்த கத்தியை எடுத்து பலமுறை லீலாவைக் குத்தி இருக்கிறார். பொதுவெளியில் அனைவருடைய பார்வையிலும் இந்தக் கொடூரச் சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றித் தகவல் அறிந்த ஜீவன் பீமா நகர் காவல்துறையினர் விரைந்து வந்து தினகரை கைது செய்தனர். அவர் மீது வழக்குப்பதிவு விசாரணை நடைபெற்று வருகிறது.
Telangana Ragging Case: சீனியர் மாணவரின் ராகிங் தொல்லையால் மருத்துவ மாணவி மயக்க ஊசி போட்டு தற்கொலை