கன்னியாகுமரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார்.
பள்ளிக்கூடத்தில் இருந்து வீடு திரும்பிய மாணவியை வீட்டில் விடுவதாக இருசக்கர வாகனத்தில் அழைத்துச் சென்று வாலிபர் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கன்னியாகுமரி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 14 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள அரசுப்பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார். இவர் வழக்கம் போல பள்ளிக்கூடம் முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தார். அப்போது, சகாயபுரத்தைச் சேர்ந்த ஜான்சன் (30) என்பவர் மாணவியை தான் வீட்டில் கொண்டு விடுவதாக கூறி இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார்.
இதையும் படிங்க;- அந்த ஆன்ட்டி மேல எப்போதும் எனக்கு மோகம்! மேக்கப்ல பார்த்ததுமே பேஜாராயி இப்படி பண்ணிட்ட! இளைஞர் பகீர் தகவல்..!
ஆனால், ஜான்சன் அந்த மாணவியை வீட்டில் விடாமல் காட்டுப்பகுதிக்கு அழைத்து சென்று மிரட்டி சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுதொடர்பாக வெளியில் சொன்னால் கொலை செய்தவிடுவதாக அந்த சிறுமியை மிரட்டி அனுப்பியுள்ளார்.
ஆனால், சிறுமி வீட்டுக்கு வந்ததும் தனது தாயாரிடம் நடந்தவற்றை கூறி கதறி அழுதுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த தாய் கன்னியாகுமரியில் உள்ள அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் உறுதியானதை அடுத்து ஜான்சனை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க;- கள்ளக்காதலுக்கு இடையூறு.. ஸ்கெட்ச் போட்டு கணவரை போட்டு தள்ளிய மனைவி.. வாண்டடா வந்து சிக்கி பலியான நண்பன்..!