கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் விவகாரம்... பேராசிரியர் ஹரிபத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்!

By Narendran S  |  First Published Apr 11, 2023, 11:00 PM IST

கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. 


கலாஷேத்ரா கல்லூரி பாலியல் புகார் விவகாரத்தில் கைதாகி சிறையில் உள்ள பேராசிரியர் ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை சைதாப்பேட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. சென்னை திருவான்மியூரில் உள்ள கலாஷேத்ரா கல்லூரியில் பயின்று வந்த மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளித்ததாக அக்கல்லூரியின் பேராசிரியர் ஹரி பத்மன் கடந்த 3 ஆம் தேதி போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இதையும் படிங்க: மனைவியின் ஆபாச படங்களை வைத்து மிரட்டிய கணவர்; 5 ஆண்டு சிறை - நீதிமன்றம் அதிரடி

Tap to resize

Latest Videos

அவர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதை அடுத்து கைதாகியுள்ள பேராசிரியர் ஹரி பத்மன் சார்பாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான விசாரணை இன்று சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது காவல்துறையினர், பேராசிரியர் ஹரி பத்மன் மீது தொடர்ச்சியாக பாலியல் புகார் தொடர்பாக மாணவிகள் மற்றும் முன்னாள் மாணவிகள் சமூக வலைதளத்தில் குற்றச்சாட்டு வைத்து வருகின்றனர்.

இதையும் படிங்க: தூய்மை பணியாளரை சாதி பெயரை சொல்லி தற்கொலைக்கு தூண்டிய திமுக பிரமுகர் போலீசில் சரண்

இந்த நிலையில் கைது செய்யப்பட்டு இருக்கும் ஹரி பத்மன் ஜாமீன் வெளியே வந்தால் சாட்சியங்களை களைக்கக்கூடும் என்றனர். இதனைத்தொடர்ந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி பத்மனின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து சைதாப்பேட்டை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

click me!