மனைவியின் அபாச படத்தை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப் போவதாக மிரட்டிய கணவருக்கு 5ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருச்சி மாநகர காவல் ஆணையரிடம் பெண் ஒருவர் கடந்த 2018ம் ஆண்டு புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த புகாரில் தனது தணவர் தன்னை ஆபாசமாக படம் பிடித்து வைத்துள்ளதாகவும், அந்த படங்களை இணையத்தில் பதிவேற்றம் செய்யப் போவதகாவும் கூறி தன்னை மிரட்டுவதாக குறிப்பிட்டு இருந்தார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்த கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் துணையினர் புகார் குறித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் அடிப்படையில் கரூரைச் சேர்ந்த பெண்ணின் கணவர் தேவ் ஆனந்த் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
undefined
திருமணமாகாத சிறுமி பிரசவத்திற்கு பின் உயிரிழப்பு; உயிருடன் வீசப்பட்ட பச்சிளம் குழந்தை மீட்பு
திருச்சி நீதிமன்றத்தில் இந்த வழக்கின் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், விசாரணை நிறைவு பெற்றதைத் தொடர்ந்து திருச்சி ஜே.எம் 2 நீதிமன்ற நீதிபதி பாலாஜி, தேவ் ஆனந்த்க்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் 1 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து தேவ் ஆனந்த் திருச்சி மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
சத்தியராஜின் உறவினர் பங்களாவில் தண்ணீர் குடிக்க வந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழப்பு