கைது செய்யப்பட்ட பாலிவால் தன்னை பணிநீக்கம் செய்ததற்கு பழிவாங்கவே கடைக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
நாக்பூர் நகரில் பெயிண்ட் கடைக்கு தீ வைத்ததற்காக 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கடையின் உரிமையாளர் தன்னை வேலையில் இருந்து நீக்கியதால் ஆத்திரத்தில் இக்குற்றத்தைச் செய்ததாக போலீசார் கூறுகின்றனர்.
செவ்வாய்க்கிழமை அதிகாலையில் நாக்பூரின் தெஹ்சில் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இட்வாரி பகுதியில் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. சம்பவத்துக்கு இரண்டு நாட்களுக்கு முன் இளைஞர் ரவுனக் பாலிவால் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
அந்தக் கடையில் 6 மாதங்கள் வேலை செய்துவந்த பாலிவால், சமீப நாட்களாக வேலையில் அலட்சியமாக நடந்துகொண்டதாகவும் அதனால்தான் அவர் பணிநீக்கம் செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்குப் பழி தீர்க்க நினைத்த பாலிவால், பூட்டப்பட்ட பின் கடைக்குத் தீயிட்டுச் சென்றிருக்கிறார்.
என் செல்போனையா திருடுற... வசமாக சிக்கிய திருடன்.. இறுதியில் என்ன நடந்தது தெரியுமா?
தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தியபோது, அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளில் பெயின்ட் கடைக்கு பாலிவால் தீ வைத்துக் கொளுத்தியது உறுதிசெய்யப்பட்டது. பூட்டப்பட்டிருந்த ஷட்டரின் கீழே இருந்த இடைவெளி வழியாக கடைக்குள் பெட்ரோலை ஊற்றி, தீ வைத்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தப்பிச் சென்றுள்ளார்.
கடை நெருப்புக்கு இறையானதில் கடையின் உரிமையாளர் புர்ஹான் தாவூத் அஜீஸ் தாவூத் (29) கிட்டத்தட்ட ரூ.45 லட்சம் நஷ்டம் அடைந்திருக்கிறார். கைது செய்யப்பட்ட பாலிவால் தன்னை பணிநீக்கம் செய்ததற்கு பழிவாங்கவே கடைக்கு தீ வைத்ததாக வாக்குமூலம் அளித்துள்ளார்.
பாலிவால் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 436 இன் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மூன்று நாள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார் என போலீசார் கூறுகின்றனர்.
கள்ளக்காதலை கைவிட மறுத்த கணவர்.. ஆத்திரத்தில் தாலி கட்டிய மனைவி செய்த காரியம்..!