திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் கிராமத்தில் சண்முகநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் நேற்று முன்தினம் இளைஞர் சிவா என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
செல்போனை பறித்த திருடனை ஒரு வாரமாக நோட்டமிட்டு அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது செய்யபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே மானூர் கிராமத்தில் சண்முகநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் நேற்று முன்தினம் இளைஞர் சிவா என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டு கிடப்பதாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர்.
undefined
இந்நிலையில் போலீசாரின் விசாரணையில் வண்டிவாய்க்கால் பகுதியை சேர்ந்த அருண், விக்னேஷ், சிவா என்ற மூன்று இளைஞர்கள் சேர்ந்து அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட சிவா இருசக்கர வாகனத்தில் வந்து அருண்குமாரின் செல்போனை கடந்த 8ம் தேதி பறித்து சென்றுள்ளார். பின்னர் செல்போனை கேட்டு அருண்குமார் தனது நண்பர்களுடன் சென்று சிவாவை ஒருவாரமாக தேடிய நிலையில் எப்போதும் நண்பர்கள் கூட்டத்திலே சிவா இருந்ததால் மூவரும் திரும்பி சென்றனர்.
கடந்த 12 ம் தேதி மாலை சிவா மானூர் ஆற்று பாலத்தில் தனியாக மது அருந்தி கொண்டிருந்த போது செல்போனை கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூவரும் சேர்ந்து தாக்கியதில் சிவா உயிழந்தார். பின்னர் ஆற்றுப்பாலத்துக்கு அடியில் உடலை போட்டு சென்றதும் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது. கொலை தொடர்பாக மூவரையும் கைது செய்துள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.